துடிதுடிக்கும் மக்கள்.. பால் கூட இல்லை.. இலங்கையில் பரிதாபம்! ஆனா ராஜபக்சே என்ன சொல்றார் பாருங்க!
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் மஹிந்த மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை பொருளாதார நிலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது
எங்கெங்கும் வறுமை.. பசி.. பட்டினி.. என்று மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

இலங்கை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மின் தடையும் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை இயக்க அங்கு போதிய நிலக்கரி இல்லை. நிலக்கரி உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யவும் வழி இல்லை. அதேபோல் நீர் மின் நிலையங்கள், மற்ற மின் நிலையங்களை இயக்க எரிபொருள் இல்லை.

கச்சா எண்ணெயை
இது போக கச்சா எண்ணெயையும் இல்லை.. இப்படி பல தரப்பிலும் தட்டுப்பாடு ஏற்படுவதால் அங்கு மின் உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின்சார தடை அங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் வாங்க லைனில் நிற்கின்றனர். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் இலங்கையில் உயர்ந்து உள்ளது.

மின் தடை
இந்த நிலையில்தான் தற்போது அங்கு மின்தடை தினமும் 10 மணி நேரம் என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் 7 மணி நேரம் என்ற அளவில் இருந்த மின் தடை தினமும் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 750 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதுதான் மின் தடைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் அந்நாட்டு அரசின் பெட்ரோலிய நிறுவனமான Ceylon Petroleum Corporation (CPC) அங்கு பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நிற்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

பெட்ரோல் இல்லை
எங்களிடம் பெட்ரோல் இல்லை. இதுவரை வந்த இறக்குமதிக்கே காசு கொடுக்க முடியவில்லை. அதனால் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் லைனில் நிற்க வேண்டாம். அதில் பயனில்லை என்று கூறியுள்ளது. இப்போது இந்தியா கொடுக்க போகும் 1 பில்லியன் டாலர் உதவி மற்றும் நிலக்கரி உதவியை நம்பித்தான் இலங்கை உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் அங்கு மருத்துவமனைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு உள்ளது.

கெமிக்கல் இல்லை
கெமிக்கல்கள் இல்லை, மயக்க மருந்து இல்லை, பல இடங்களில் சாதாரண மருந்துகள் கூட இல்லை என்ற நிலை நிலவுகிறது. இதனால் கொழும்பில் பெரிய மருத்துவமனைகள் பலவற்றில் சர்ஜரிகள், அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கு மின் தடையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு ஆளும் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ராஜபக்சே
முக்கியமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக போரட்டங்கள் நடந்து வருகின்றன. இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் மகிந்த ராஜபக்சே என்ன நடந்தாலும் தான் பதவி விலக மாட்டேன் என்று கூறியுள்ளார். எனக்கு இன்னும் ஆட்சி செய்ய காலம் இருக்கிறது.

விளக்கம்
நான் இப்போது ரிட்டையர் ஆக முடியாது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது. அடுத்த முறையும் பிரதமர் ஆகும் திட்டங்கள் இருக்கின்றன. பிரதமர், அதிபர் தேர்தலில் மீண்டும் நாங்களே வெல்வோம். எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த பிரச்னையை சரி செய்வோம்., என்று மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டு இருக்கிறார். மகிந்த ராஜபக்சே பொருளாதாரம் பற்றி பேசாமல் இப்படி தேர்தல் பற்றி பேசியதை அந்நாட்டு மக்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications