கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எங்களை சுடுங்க".. இரவு முழுக்க தூங்காமல்.. அரணாக காத்த கன்னியாஸ்திரிகள்! நெகிழ்ந்த இலங்கை போராளிகள்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடக்கும் நாடு தழுவிய போராட்டம் மக்களை மதம், இனம் கடந்து இணைய வைத்து இருக்கிறது. நேற்று போராட்டம் நடக்க கோ கோட்ட கமா பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு கடந்த இரண்டு வருடமாக பொருளாதாரம் சரிந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் நிலைமை மோசமானது.

மக்கள் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் கஷ்டப்பட தொடங்கினார்கள். விலைவாசி உச்சம் தொட்டது. பெட்ரோல், டீசல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் செய்ய தொடங்கினார்கள்.

 பின்னை இட்ட தீ தென் இலங்கையில்..பட்டினத்தாரின் வரிக்கு சரியான சாட்சி இப்போது.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பின்னை இட்ட தீ தென் இலங்கையில்..பட்டினத்தாரின் வரிக்கு சரியான சாட்சி இப்போது.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இலங்கை

இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக சரிந்த நிலையில்தான் மக்கள் கடந்த 3 மாதமாக தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். . இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர், பிரதமர் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர்.

போராட்டம்

போராட்டம்

இதற்காக அதிபர் அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் பகுதியில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் பகுதிக்கு கோ கோட்ட கமா என்று பெயர் வைத்து அந்த பகுதியில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். இதையடுத்து இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போரட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் நேற்று முதல்நாள் நடந்த போராட்டத்தில் இலங்கை மக்கள் மீது மஹிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் இடையே மகிந்த ஆட்கள் இங்கு கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனால் போராட்டம் நடக்கும் கோ கோட்ட காம பகுதியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மத மோதல்

மத மோதல்

இந்த போராட்டத்தை ஒரு மத மோதல் போல மாற்றலாம் என்று இலங்கை அரசு முயன்று வருவதாக அந்நாட்டு மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். இந்துக்கள் - இஸ்லாமியர்கள் - புத்தர்கள் - கிறிஸ்துவர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்தி மக்களை மோதலுக்கு உள்ளாக்கும் வகையிலும், போராட்டத்தை நிறுத்தும் வகையில் அரசு இப்படி செய்வதாக புகார் எழுந்துள்ளது. பல இடங்களில் இவர்களே கலவரத்தை ஏற்படுத்தி மக்கள் மத ரீதியாக அடித்துக்கொண்டதாக கிளப்பி விட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

புத்த பிக்குகள்

புத்த பிக்குகள்

இந்த நிலையில்தான் நேற்று இலங்கை போராட்டத்தின் போது கோ கோட்ட காம பகுதியில் மக்கள் சாரை சாரையாக கூடி போராட்டம் செய்தனர். அப்போது அங்கு மத ரீதியாக மோதல் நடக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவ பெண் கன்னியாஸ்திரிகள் கூடி அரமாக நின்று மக்களை காத்தனர். இரவு முழுக்க தூங்காமல் இவர்கள் கோட்ட கோ காம பகுதியிலேயே தங்கி மக்களை காத்தனர். இரவில் போராட்டம் நடக்கும் இடத்தில் கலவரக்காரர்கள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !
    கலவரக்காரர்கள்

    கலவரக்காரர்கள்

    இதனால் அங்கு கலவரம் எதுவும் நடக்காத வகையில் கன்னியாஸ்திரிகள் கூடி நின்று இரவு முழுக்க காவல் செய்தனர். கன்னியாஸ்திரிகளின் இந்த செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்க தூங்குங்க.. நாங்க பார்த்துக்குறோம். யாரும் உள்ளே வரமா பார்த்துக்குறோம் என்று கூறி அவர்கள் அங்கேயே இரவு முழுக்க தங்கி இருந்தனர். கன்னியாஸ்திரிகள் தங்கள் உடையில், இரவு முழுக்க அமர்ந்தபடி மக்களை காத்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அங்கு போராளிகள் மீது அரசு இரவில் துப்பாக்கி சூடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் கன்னியாஸ்திரிகள் தங்களை சுட்டாலும் பரவாயில்லை தைரியமாக மக்களுக்காக அரணாக நின்றனர்.

    மத ஒற்றுமை

    மத ஒற்றுமை

    மத ஒற்றுமையின் அடையாளமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு இந்த விவகாரத்தை மத மோதலாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையில் முந்தைய ஆண்டுகளில் பல முறை மத மற்றும் இன ரீதியான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை மத, இன ரீதியான மோதல்களுக்கு எல்லாம் மக்கள் இடம் கொடுக்கவில்லை. ராஜபக்சே ஆதரவாளர்கள் பரப்பும் வதந்திகளை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒன்றாக நின்று, அரசை கலைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

    English summary
    Sri Lanka Crisis and Protest Latest News in Tamil : Nuns and priests in Sri Lanka reportedly stayed up through the night last night in order to protect #GotaGoGama from violence from any outside element seeking to destabilize peaceful protests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X