Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடு இரவில்.. வேறு வழியே இல்லாமல் லாக் ஆன ராஜபக்சே குடும்பம்.. நாட்டை விட்டு தப்பிக்கும் உறவினர்கள்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நிலை காரணமாக ராஜபக்சே குடும்பம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டின் மோசமான பொருளாதார நிலைக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

Recommended Video

    SriLanka-வை ஆண்ட Rajapaksa குடும்பத்திற்கு வந்த நிலைமை | Oneindia Tamil

    ஏனென்றால் அந்நாட்டு ஆட்சியில் முக்கியமான பொறுப்புகள், பவர் ஃபுல் அமைச்சரவை அனைத்தையும் ராஜபக்சே குடும்பம்தான் தனது கையில் வைத்து இருக்கிறது.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அங்கு பசில் ரோஹன் ராஜபக்சே நிதி அமைச்சராக அங்கு பதவி வகித்து வந்தார். இவர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். சமல் ராஜபக்சே அங்கு நீர் வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ராஜபக்சே குடும்பத்தில் மூத்த அண்ணன் இவர்தான்.

    நமல் ராஜபக்சே

    நமல் ராஜபக்சே

    நமல் ராஜபக்சே அங்கு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் மகிந்தவின் மகன். இது போக சமல் ராஜபக்சேவின் மகன் ஷாஷீன்ரா ராஜபக்சே அங்கு அமைச்சரவையில் இருந்தார். மகிந்த ராஜபக்சேவின் சகோதரியான காந்தினி ராஜபக்சேவின் மகன் நிபுணர் ராஜபக்சே அங்கு எம்பியாக இருக்கிறார். இன்னும் பலர் அங்கு ராஜபக்சே குடும்பத்தில் இருந்து முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

     பிரதமர் அதிபர்

    பிரதமர் அதிபர்

    அங்கு அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான போராட்டங்கள் நடந்து வந்தன. ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்கிறது என்றால் கண்டிப்பாக அந்த நாட்டு ஆட்சியாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இலங்கையிலோ ஆட்சியில் இருக்கும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராஜபக்சே குடும்பம் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

     அமைச்சர்

    அமைச்சர்

    அதிலும் பசில் ரோஹன் ராஜபக்சே நிதி அமைச்சராக அங்கு கடந்த வருடம் பதவி ஏற்றத்தில் இருந்து பொருளாதாரம் வேகமாக சரிந்தது. நாடு மிக மோசமான பொருளாதார நிலையை அடைந்தும் கூட எந்த விதமான அதிரடி முடிவுகளும் அங்கே எடுக்கப்படவில்லை. ஐஎம்எப் நிதியத்திடம் உதவி கேட்பது, இந்தியா, சீனாவிடம் உதவி கேட்பதை தவிர வேறு எந்த விதமான தீர்வும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல்

    இதனால் தினமும் அந்த நாட்டு பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது. இதனால் பிரதமர், அதிபர் அலுவலகம் முன் கடுமையான போராட்டங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அதிபர் கோத்தபய ராஜபக்சே வீடு முன்பே 2000க்கும் அதிகமான மக்கள் கூடி போராட்டம் செய்தனர்.

     ராணுவம் குவிப்பு

    ராணுவம் குவிப்பு

    இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. நாடு முழுக்க துணை ராணுவம் குவிக்கப்பட்டது. ஆனாலும் மக்களை போராட்டம் செய்யாமல் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. முக்கியமாக கொழும்பில் பல இடங்களில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருந்தும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி சாலையில் இறங்கி போராடினார்கள்.

    ஆதரவாக பலர்

    ஆதரவாக பலர்

    இது போக கைதான மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இலவச நீதி சேவை வழங்கினர். ஐபிஎல்லில் பிசியாக இருக்கும் சங்ககரா போன்ற கிரிக்கெட் வீரர்களும் கூட அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தனர். சொந்த நாட்டு மக்களை கைது செய்வதால் பொருளாதாரம் சரியாகிவிடாது. காலம் வேகமாக செல்கிறது, ஏதாவது முடிவெடுங்கள் என்று கூறினார்.

    கடும் போராட்டம்

    கடும் போராட்டம்

    இதையடுத்தே வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அங்கு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை 6 மணிக்குத்தான் ஊரடங்கு முடிந்தது. ஆனாலும் அங்கு லட்சக்கணக்கில் மக்கள் பல இடங்களில் போராட்டம் செய்தனர். என்னதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்கள் போராட்டம் செய்வது தொடர்ந்தது.

    உலக நாடுகளில் போராட்டம்

    உலக நாடுகளில் போராட்டம்

    இலங்கை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இலங்கை மக்களும் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக போராட்டம் செய்தனர். ஏன் மகிந்தவின் மகன் நமல் ராஜபக்சே கூட.. சமூக வலைத்தளங்களை முடக்கியது தவறு என்று விமர்சனம் வைக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. இலங்கையில் மக்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அங்கு அமைச்சர்கள் எல்லோரும் ராஜினாமா செய்தனர்.

    ராஜினாமா

    ராஜினாமா

    ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட எல்லோரும் மொத்தமாக ராஜினாமா செய்தனர். ராஜபக்சே குடும்பத்திற்கு வைக்கப்பட்ட முதல் பெரிய செக் இதுவாக பார்க்கப்படுகிறது. இரவோடு இரவாக வேறு வழியே இல்லாமல் ராஜபக்சே குடும்பம் அமைச்சரவை பதவிகளை துறந்துள்ளது. அந்த அளவிற்கு அந்த குடும்பம் மக்கள் போராட்டங்களால் லாக் ஆகியுள்ளது. அங்கு புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்திற்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். என்னதான் அமைச்சரவை மாற்றம் நடந்தாலும் அங்கு பொருளாதாரம் மீண்டு வருவது கஷ்டம் என்றே கூறப்படுகிறது.

    தப்பி ஓட்டம்

    தப்பி ஓட்டம்

    இதை கருதி அங்கு ராஜபக்சே குடும்பத்தினர் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில், நமல் ராஜபக்சேவின் மனைவி, அதாவது மகிந்தவின் மருமகள் லிமினி தனது குழந்தைகளுடன் வெளிநாடு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மகிந்தவின் மற்ற மகள்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் பலர் வெளிநாடு தப்பிக்க போவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில்தான் நேற்று டெய்லி மிரர் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+