கஷ்டம்.. நடுங்கி போன ராஜபக்சே குடும்பம்! உளவுத்துறையையே திணறடித்த மக்கள்.. இலங்கையில் என்ன நடந்தது?
கொழும்பு: இலங்கையில் பிரதமர் மற்றும் அதிபருக்கு எதிராக மக்கள் தீவிரமான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மக்களின் போராட்டம் காரணமாக நாடு முழுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இல்லாத மிக மோசமான பொருளாதார சரிவை இலங்கை சந்தித்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் இலங்கையில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணிக்கான டாலர் கையிருப்பு கிட்டத்தட்ட திவால் ஆகிவிட்டது.
இது நாட்டில் விலைவாசியை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் இலங்கை அரசால் எரிபொருள், உணவு தானிய இறக்குமதியை மேற்கொள்ள முடியவில்லை.

குடும்பத்திற்கு எதிராக போராட்டம்
அங்கு ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராகத்தான் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ராஜபக்சே குடும்பம் எடுத்த முடிவுகள், அந்த குடும்பத்தை சேர்ந்த அமைச்சர்கள் எடுத்த முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் இப்படி மோசமானதாக கூறி மக்கள் கடுமையாக போராட்டம் செய்து வருகிறார்கள். இதையடுத்த அங்கு ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட எல்லா அமைச்சர்களும் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து மக்கள் போராடி வருகின்றனர்.

வீடுகள் முற்றுகை
இதையடுத்தே கடந்த வியாழக்கிழமையில் இருந்து ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை குறி வைத்து முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர். நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடு முன் மக்கள் போராட்டம் செய்தனர். வியாழக்கிழமை, அதிபர் கோத்தபய ராஜபக்சே வீடு முன் மக்கள் போராட்டம் செய்தனர். அதேபோல் நேற்று இரவு ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளின் முன் மக்கள் போராட்டம் செய்தனர். இதில் சிலரின் வீடுகளும் தாக்கப்பட்டன. மொத்த ராஜபக்சே குடும்பமும் இதனால் நடுங்கி போய் உள்ளது.

கணிக்க முடியவில்லை
மக்களின் இந்த போராட்டத்தை அந்த நாட்டு உளவுத்துறை கணிக்க முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் திணறிப்போய் உள்ளதாக இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை சேர்ந்த ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். லங்கா ஸ்ரீ ஊடகத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை முழுக்க மக்கள் போராடுகிறார்கள். அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மக்கள் திடீர் திடீரென போராடுகிறார்கள்.

திடீர் திடீரென போராடுகிறார்கள்
ஒரு இடத்தில் போராட்டம் முடக்கப்பட்டால்.. இன்னொரு இடத்தில் மக்கள் போராட்டம் செய்கிறார்கள். அங்கு எம்பிக்கள் மக்களுக்கு பயந்து போய் உள்ளனர். மக்கள் வசம் சிக்கிவிட கூடாது என்பதால் எம்பிக்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தாமல் சாதாரண கார்களை பயனப்டுத்துகிறார்கள். இலங்கை கொடி இல்லாமல், எம்பிக்களுக்கான சின்னம் இல்லாமல் ரகசியமாக பதுங்கி பதுங்கி பயணம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

எம்பிக்கள் என்ன செய்தனர்?
அதாவது உளவுத்துறையை குழப்பும் வகையில் மக்கள் முறையாக திட்டமிட்டு போராட்டங்களை செய்து வருகின்றனர். இலங்கையில் இருந்து வெளியாகும் மற்ற தகவல்களும் இதே விஷயத்தை தெரிவிக்கின்றன. இலங்கையில் ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பிற்கு கூட்டணி கட்சிகளே ஆதரவை வாபஸ் வாங்கி வருகின்றன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட எம்பிக்கள் வரும் நாட்களில் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஆதரவு வாபஸ்
முன்னதாக இலங்கையில் ஆளும் கட்சியின் அதிகார பகிர்வில் இடம்பெற விரும்பவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது. அங்கு நாடளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பிற்கு 145 இடங்கள் வரை உள்ளன. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு வாபஸ் காரணமாக, சொந்த கட்சி எம்பிக்கள் தனித்து செயல்பட விரும்புவதால், ஆட்சியே அங்கு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications