"பயங்கரவாதிகளின் புகலிடம்.." கனடாவை லிஸ்ட் போட்டு விமர்சித்த இலங்கை.. உலக அரசியல் மாறுதே! ஏன் இப்படி
கொழும்பு: இந்தியா கனடா இடையேயான உறவு ஒரு பக்கம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், மற்றொரு புறம் இலங்கையும் கனடாவைக் காட்டமாக விமர்சித்துள்ளது. கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகச் சாடியுள்ளது.
இந்தியா கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில காலமாக மோசமான உறவு நிலவி வருகிறது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணம்.

இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், கனடா அரசியல் ஆதாயங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் சாடியது. மேலும், ஆதாரங்களை வெளியிட வலியுறுத்தியது. இருப்பினும், கனடா ஆதாரங்கள் வெளியிட மறுத்துத் தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறது.
இலங்கை விமர்சனம்: இதற்கிடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கனடாவை விமர்சித்துள்ளார். கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், ஜஸ்டின் ட்ரூடோ எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது சரி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ட்ரூடோ எப்போதும் இப்படிச் செய்பவர்தான் என்பதால் இது தனக்கு ஆச்சரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதிகளில் கனடாவில் பாதுகாப்பாக உள்ளனர். கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. கனடா பிரதமர் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். முன்பு இலங்கையை நோக்கியும் இதுபோல அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனைவருக்கும் தெரியும் இப்போது அடுத்து இந்தியாவை நோக்கிக் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளனர்" என்றார்.
நாஜி வீரர்: தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தில் முன்னாள் நாஜி வீரர் கவுரவிக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், "இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளுடன் இருந்த ஒருவரை நாடாளுமன்றத்தில் வைத்துக் கவுரவித்துள்ளனர். இது கேள்விக்குரிய நடவடிக்கை. கடந்த காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டார்கள் போல இருக்கிறது. சொந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இப்படி நடக்க அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ தொடர்ந்து ஆதாரமற்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்." என்றார்.
கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றிருந்தார். அப்போது அவருடன் சென்ற முன்னாள் ராணுவ வீரர் கனடா நாடாளுமன்றத்தில் வைத்துக் கவுரவிக்கப்பட்டார். இருப்பினும், அந்த முன்னாள் ராணுவ வீரர் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த நாஜிக்களுடன் இருந்தவர் என்பதால் அது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கனடா சபாநாயகர் பகிரங்க மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
தலையிடக் கூடாது: மேலும் அவர் பேசுகையில், "முன்பு எங்களை நோக்கியும் அவர் இதுபோலத் தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதுவே கனடா இலங்கை உறவைப் பாதித்தது. அங்குள்ள அமைச்சர்களே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு முரணான கருத்துகளைக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.. அனைத்தையும் தாண்டி மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் ட்ரூடோ தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். எந்தவொரு நாட்டின் உள் விவகாரத்திலும் தலையிட்டு, நாட்டை எப்படி ஆள வேண்டும் என யாரும் கிளாஸ் எடுக்கத் தேவையில்லை.
மற்றவர்களை விட நாட்டு மக்களே சொந்த நாட்டை அதிகம் நேசிப்பார்கள். எனவே, கனடாவின் குற்றச்சாட்டுகளை ஏற்கவே முடியாது. நாம் பிராந்தியத்தைக் கவனிக்க வேண்டும்.. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் அமைதியான சூழலை உருவாக்க முடியும். வெளியே எங்கோ இருந்து கொண்டு மற்றொரு நாட்டை குற்றஞ்சாட்டுவதை ஏற்கவே முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து கனடா விமர்சித்திருந்தது. இதனால் இலங்கை கனடா நாடுகளுக்கும் இடையே உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மோசமான பொருளாதார சூழல் நிலவி வருகிறது. அப்போது உலகின் எந்த நாடும் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை.. இந்தியா மட்டுமே தொடர்ந்து பல உதவிகளை செய்து வந்தது கவனிக்கதக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!










Click it and Unblock the Notifications