இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு - மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொழும்பு: இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளதையடுத்து, பிரதமர் மகிந்திர ராஜபக்சேவை தவிர்த்து, ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3ஆம் தேதி இரவு கூட்டாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விலகினர். எனினும் மறுநாள், நாடாளுமன்ற மற்றும் அரச விவகாரங்களை முன்நடத்தி செல்வதற்காக நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் பதவிகளை வழங்கினார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் அதே பிரச்சனைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தனர். இதன்போது புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனைபட்ட நிலையில், தனக்கு எவ்வித ஆட்சி பொறுப்புகளை வழங்கவேண்டாம் என ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர் போராட்டம்
மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் கோரிக்கை என்பது அமைச்சர் ராஜபக்சே குடும்பங்கள் பதவி விலக வேண்டும் என்பதே. எனினும் இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சிலர் சுயநலமாகவும், சிலர் அமைச்சர் பதவிகளை வேண்டாம் என கூறி அதிபருக்கு வலியுறுத்தினர். மக்களின் போராட்டம் மற்றும் கோரிக்கையானது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே ஆகும்.

கோத்தபய ராஜபக்ச முடிவு
இந்த நிலையில், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்று உள்ளது.

17 பதவியேற்பு
இந்த அமைச்சரவையில் சுமார் 17 பேர் மட்டுமே புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு கிடைக்குமா
ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் புதிய அமைச்சரவைகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்; தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications