மெல்ல மீண்ட இலங்கை.. கைகொடுத்த இந்தியா! பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை தற்போது மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாள் பயணமாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறையாகும்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பணம் உள்ள நாடுகள் இந்த மந்த நிலையை சமாளித்துவிடுகிறது. ஆனால், பொருளாதார பலமற்ற நாடுகள் பெரும் இழப்புகளை சந்திக்கிறது. அப்படியாகதான் இலங்கையும் மாட்டிக்கொண்டது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது, தீவிரவாத தாக்குதல்கள், கொரோனா நெருக்கடி என மீளவே முடியாத சூழலில் இலங்கை சிக்கியது.

இது மக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. போராட்டங்கள் கலவரங்களாக வெடித்தன. பெட்ரோல், அரிசி, கேஸ், காய்கறிகள், முட்டை, பால் என அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. போதாக்குறைக்கு மின்வெட்டும் மக்களை வாட்டி வதைத்தது. இவை அனைத்தும்தான் மக்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையே போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு தப்பினர்.
இப்படியாக பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இதற்காக இந்தியா பேருதவிகளை செய்திருக்கிறது. இந்த உதவிக்கு ரணில் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய நாணயம் குறித்து அவர் பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது, இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகவும், இது இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதாகவும் கூறியிருந்தார். மேலும், அமெரிக்க டாலரை போல இந்தியாவின் ரூபாயயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இது இந்தியாவின் அந்நிய செலாவணியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகிறார். நாளையும், நாளை மறுநாளும் இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications