கோத்தபாயவின் விலகல் கடிதத்துக்காக காத்திருக்கும் இலங்கை..ரணில் ராஜினாமாவை வலியுறுத்தும் தலைவர்கள்!
கொழும்பு: இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்ட கோத்தபாய ராஜபக்சே, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அனுப்பி வைப்பார் என இலங்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் கோத்தபாயவின் கடிதம் பெறுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். கோத்தபாய மாலத்தீவுக்கு போய்விட்டதாக இலங்கை பிரதமர் அலுவலகம், விமானப் படை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ஜூலை 13-ந் தேதி தாம் பதவி விலகுவதாக கோத்தபாய அறிவித்திருந்தார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது.

கோத்தபாய ராஜினாமா
ஆனால் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை பகிரங்கப்படுத்திவிட்டு தப்பி ஓடினால், வெளிநாடுகள் அனுமதிக்காது; வெளிநாடுகளில் அகதியாக தஞ்சமடைய முடியாது என்பதால் இன்னமும் ராஜினாமா கடிதத்தை கோத்தபாய வெளியிடவில்லை; இக்கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்காலிக ஜனாதிபதி ரணில்
இதனிடையே தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியிருந்தார். அதேநேரத்தில் பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை எந்த நிமிடத்திலும் கைப்பற்றக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

முப்படைகள் வேண்டுகோள்
இந்நிலையில் இலங்கை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா கூட்டினார். இக்கூட்டம் நடைபெறும் போது செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி சவேந்திர சில்வா, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து அரசியல் தீர்வை எட்ட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்த சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், ரணில் விக்கிரமசிங்கே முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கோத்தபாயவின் பதவி விலகல் அமலுக்கு வரும் முன்னர் ரணில் ராஜினாமா அவசியம். கோத்தபாய ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார் என எதிர்பார்க்கிறோம். அப்படி கோத்தபாய ராஜினாமா செய்யாவிட்டால் தாம் சபாநாயகர் பதவியை ராஜினமா செய்வேன் என மஹிந்த யாப்பா கூறியிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை கடுமையாக ஒடுக்கலாம் என்ற பாதுகாப்பு படையினரின் யோசனைக்கும் அனைத்து கட்சித் தலைவர்கள் அனுமதி மறுத்துள்ளனர் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications