இலங்கை பொருளாதாரத்தை 'தூக்கி நிறுத்த' போகும் இரு தமிழர்கள்.. யார் இவர்கள்?
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளித்து நிலைமையை முன்பு இருந்தது போல் மீட்டெடுக்க பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
Recommended Video
இலங்கையில் வரலாறு காணாத வகையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, தொடர் மின் வெட்டு போன்ற காரணங்களால் மக்கள் வீதிக்கு வந்து போராடினர்.
இதையடுத்து இலங்கையில் பதற்றம் அதிகமாக உள்ள இடங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்ச ஆகியோரை தவிர மற்ற அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.

புதிதாக நியமனம்
இந்த நெருக்கடியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரியும் ஒரே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ஆலோசனை குழுவை நேற்றைய தினம் நியமித்தது. இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவினரின் பணி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகும்.

குழு எதற்கு
இந்த குழுவினர் இலங்கை தொடர்புடைய நிறுவனங்கள், சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். நாட்டின் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும்.

குழுவில் யார் யார்
இந்த குழுவில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கையின் ஜார்ஜ் டவுன் பல்கலை., பேராசிரியரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன், சர்வதேச நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஷர்மினி கூரே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேரில் இருவர் தமிழர்கள். சாந்தா தேவராஜனும் இந்திரஜித்தும் தமிழர்கள்.

வேறு என்ன மாற்றம்
இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்டு கேப்ரால் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். ஆனால் அவர் 7 மாதங்களில் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவிக்கு நந்தலால் வீரசிங்கேவை நியமித்து அதிபர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல் மத்திய வங்கியின் பொருளாளராக இருந்த எஸ்.ஆர். அட்டிகேலேவுக்கு பதிலாக கே எம் எம் சிரிவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications