வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சான்றிதழ் கட்டாயம்- இலங்கை அரசு அதிரடி
தேவை என இலங்கை அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலங்கையில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 8 தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதல்களில் மொத்தம் 277 பேர் பலியாகினர்.

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருமணம் மூலம் இலங்கையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்தது. அதாவது பயங்கரவாதிகள், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கறுப்பு பணம் பதுக்கலில் தொடர்புடையவர்கள் இலங்கை பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இந்த விசாரணைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து இலங்கை அரசு தற்போதைய திருமண நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாஸ்போர்ட், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகிய மூன்று மட்டும் போதுமானதாக இருந்தது.
தற்போது வெளிநாட்டவரை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் தடை நீக்கல் சான்றிதழை கட்டாயமாகப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அத்துடன் வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா? தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா? நீண்டகால நோய்கள் எதுவும் இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கையையும் கொடுக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications