இலங்கை: பொதுமக்கள் போராட்டம் எதிரொலி- பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் வேறுவழியே இல்லாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 3 மாதங்களாக இலங்கையில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. ஆனால் இதனை ஏற்க மறுத்து வந்தனர் ராஜபக்சேக்கள். இந்த நிலையில் இன்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
முன்னதாக கொழும்பில் இன்று மகிந்த ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக இலங்கையை நான் அராஜகமாக்க விரும்பவில்லை. நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிப்பதுதான் எமது கொள்கை. இந்த சவால்களில் இருந்து தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் சொந்த அரசியல் லாபங்களை முன்னெடுக்கின்றன. அந்த எதிர்க்கட்சிகளுக்கு தேவையானது அதிகாரம் மட்டுமே.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் என்ன மாதிரியான முடிவும் எடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். என் மீது பொதுமக்கள் வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறினார்.

ராஜபக்சேவுக்கு நெருக்கடி
இந்நிலையில் தமது பதவியை காப்பாற்றிக் கொண்டு அண்ணன் மகிந்த ராஜபக்சே பதவிக்கு வேட்டு வைக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்சே காய்களை நகர்த்தினார். இதனால் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

எதிர்க்கட்சிகள்
கொழும்பில் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில், அரசியல் இலாபங்களுக்காக இலங்கையை நான் அராஜகமாக்க விரும்பவில்லை. நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிப்பதுதான் எமது கொள்கை. இந்த சவால்களில் இருந்து தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் சொந்த அரசியல் லாபங்களை முன்னெடுக்கின்றன. அந்த எதிர்க்கட்சிகளுக்கு தேவையானது அதிகாரம் மட்டுமே.
Recommended Video

தியாகத்துக்கு தயார்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் என்ன மாதிரியான முடிவும் எடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். என் மீது பொதுமக்கள் வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது என கூறியிருந்தார்.

மகன் வெளிநாடு தப்பி ஓட்டம்
இதனிடையே மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ராஜபக்சே மகன் யோஷித தப்பி ஓடிய அதேநேரத்தில் ராஜபக்சே பதவி விலகக் கூடாது என கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் உக்கிரமான போராட்டம் நடத்தினர்.

வன்முறை வெறியாட்டம்-ராஜினாமா
இதன்பின்னர் கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவு குண்டர்கள் கொடூர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல்களில் சுமார் 75 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ராஜபக்சேக்கள் மீதான அதிருப்தி அதிகரித்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் மகிந்த ராஜபக்சே. அவரைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர்களும் தங்களது ராஜினாமாவை அறிவித்தனர்.On 09-05-2022 16:14, Karthick s wrote:












Click it and Unblock the Notifications