நான் வெற்றிபெற்றுவிட்டேன்.. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே வெற்றியை அறிவித்த கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கையில் ஒட்டுமொத்தமாக சுமார் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் போட்டி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவருக்கும் அங்கு இருக்கும் சிறிய கட்சிகள் பல ஆதரவு தெரிவித்தது. அதனால் இந்த தேர்தல் சூடுபிடித்துள்ளது.

சூடு பிடித்தது
முக்கியமாக தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இன்னொரு பக்கம் கருணா. வரதராஜ பெருமாள் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கிறார்கள். இதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பலர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர்.

யார் முன்னணி
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட 90697 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 1516260 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 14255623 வாக்குகள் பெற்றுள்ளார்.

அறிவித்தார்
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

எதிர்ப்பு
காலையில் இருந்து தான் முன்னிலை வகிப்பதால் கோத்தபய ராஜபக்சே இப்படி பிரகடனப்படுத்தி உள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேர்தலில் அவரின் அறிவிப்பு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications