ஹிட்லர் மாதிரி கோத்தபாய ஆட்சி இருக்கனுமாம்.. சிங்கள அமைச்சருக்கு பொளேர் பதில் போட்ட ஜெர்மன் தூதர்
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ஹிட்லரைப் போல ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புவதாக அமைச்சர் திலும் அமுனுகம கூறிய விவகாரம் சர்வதேச அரங்கில் சர்ச்சையாகிவிட்டது.
இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும் பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியில் உள்ளனர். இருவருமே சர்வாதிகாரிகளாகவே செயல்பட்டனர் என்பது உலகறிந்த உண்மை.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்கக் கோரி 12 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்துகின்றனர் தமிழர்கள்.

கல்நெஞ்ச ராஜபக்சேக்கள்
அதேபோல் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள் படுகொலை, அப்பாவி பெண்களை பலாத்காரம் செய்த கொடூரம் என்பவற்றுக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்பது தமிழரின் கோரிக்கை. இது தொடர்பாக சர்வதேச சமூகம் நெருக்கடி கொடுத்தும் ராஜபக்சே சகோதரர்கள் அசைவதாக இல்லை.

ஹிட்லாராக வேண்டுமாம் கோத்தபாய
இப்படியான கொடூரர்களைத்தான் இன்னமும் ஹிட்லராகவே உருமாறி ஆட்சி செய்ய வேண்டும் என சிங்கள் அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். சிங்கள அமைச்சரின் இந்த இனவிரோதப் பேச்சு தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இந்த கருத்து சர்வதேச அளவிலும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஜெர்மனியின் தடாலடி பதிலடி
திலும் அமுனுகமவின் பேச்சுக்கு இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஹோல்கர் சீபெர்ட் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஹிட்லர் பாணி ஆட்சி இலங்கைக்கு நன்மை தரக் கூடியது என்பதை கேள்விபட்டேன். பல லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்கும் மனிதகுலம் நினைத்துப் பார்க்காத துயரங்களுக்கும் ஹிட்லர்தான் காரணம். ஹிட்லர் என்பவர் முன்மாதிரியான அரசியல்வாதி என பதிவிட்டுள்ளார்.

ஹிட்லருக்கு நேர்ந்த கதிதான் வேண்டுமா?
மேலும், கோத்தபாய ஹிட்லராக உருமாற விரும்புவதில் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனால் ஹிட்லர் கடைசி காலத்தில் காதலியுடன் தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது வரலாறு- முசோலி பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டு வீதியில் தொங்கவிடப்பட்டார் என்பதும் வரலாறு. இதைத்தான் கோத்தபாயவும் சிங்கள தரப்பும் விரும்புகிறதா? என்கிற கேள்வியையும் இலங்கை எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications