இலங்கை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு,அரசியல் தீர்வு அவசியம்- முப்படை தளபதிகள் அப்பீல்
கொழும்பு: இலங்கையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் நாட்டின் குழப்பநிலைகளுக்கு அரசியல் தீர்வுகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் இலங்கையின் முப்படை தளபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Recommended Video
இலங்கையின் அரசியலில் இதுவரை இல்லாத வகையில் இலங்கையின் முப்படை தளபதிகள், போலீஸ் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியதாவது: பொதுமக்கள், இளைஞர்கள் தற்போதைய நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வரை அமைதி காக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கும் போலீசாருக்கும் அனைத்து தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும். தனிநபர், பொதுச்சொத்துகளை சேதம் விளைவிக்க வேண்டாம். நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்க எங்களை கடமையாற்ற விட வேண்டும்.

நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை அமைதியை நிலைநாட்ட முப்படையினரும் போலீசாரும் தயார் நிலையில்தான் உள்ளனர். சபாநாயகர் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே இலங்கை பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம். நாடு தற்போது எதிர்நோக்கும் வன்முறைக் குழுக்களின் நடத்தைகள் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல்பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications