தீ வைப்பில் அத்தனையும் நாசமானதே.. ரத்த கண்ணீர் வடிக்கும் ரணில்! ஜூலை 20-ல் புதிய ஜனாதிபதி தேர்தல்!
கொழும்பு: இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 20-ல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கேவிடம் இது தொடர்பாக இன்றும் உறுதி அளித்துள்ளார் கோத்தபாய ராஜ்பக்சே.
கொழும்பு ஜனாதிபதி மாளிகையை கைவிட்டு விட்டு தப்பி ஓடிய இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் தஞ்சமடைந்துள்ளார் கோத்தபாய. அவர் தமது குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதிய தற்காலிக ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகளை சபாநாயகர் தரப்பு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதன் முடிவில், ஜூலை 15-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்; ஜூலை 20-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதனிடையே தமது வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் கூறியுள்ளதாவது: பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை மீட்டு எடுக்க 4 ஆண்டுகள் தேவைப்படும். ஜூலை 9-ந் தேதி போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தலாம் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதனால் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினோம்.
எனக்கு இருந்த ஒரே ஒரு வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டது. அதில் அழிந்தவை என்னுடைய புத்தகங்கள். அதில் அரிய புத்தகங்கள், பழங்கால பொருட்கள் இருந்தன. அன்னியர் ஆட்சிக் காலத்து புத்தகங்களும் கூட எரிக்கப்பட்டுவிட்டன. பழங்காலத்து சித்திரங்களும் அதில் இருந்தன. விமலதர்மசூரிய மன்னன் ஒல்லாந்து தூதுவரை சந்தித்த 200 ஆண்டு பழமைவாய்ந்த ஒல்லாந்து சித்திரமும் இருந்தது. அத்தனையும் எரிக்கப்பட்டுவிட்டன என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications