இலங்கையில் மோசமாகும் நிலைமை.. போராட்ட களத்தில் குதித்த மாணவர்கள்.. பின்வாங்குகிறாரா கோத்தபய ராஜபக்ச?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கண்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வார இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் ராணுவத்தினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

2019aஅம் ஆண்டு இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படும் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அதே பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்சியை இழக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே போராடும் அளவுக்கு நாட்டில் விலைவாசி உயர்வு தாண்டவமாடுகிறது.

இலங்கையில் வன்முறை

இலங்கையில் வன்முறை

கடந்த வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அதிபர் பதவி விலகக் கோரி போராடிய நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் போராட்டத்தை தடுக்க ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கண்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வார இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்தினர்.

அரசுக்கு எதிராக பேரணி

அரசுக்கு எதிராக பேரணி

தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டிற்கு அருகில் தாக்குதல் துப்பாக்கி ஏந்திய பெரும் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை அடக்கும் வகையில் இலங்கை அரசு சனிக்கிழமையன்று பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளது.

ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கிய ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக குறைந்தது 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக பதிவுகளில் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததால்தான் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#GoHomeRajapaksas ஹேஸ்டேக்

#GoHomeRajapaksas ஹேஸ்டேக்

தற்போது இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான சட்டங்கள் இராணுவத்திற்கு சந்தேக நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு விசாரணை இல்லாமல் காவலில் அடைத்து வைக்க அனுமதித்துள்ள நிலையில், பொது ஒழுங்கைப் பாதுகாக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிக்கவும் அவசரகாலச் சட்டம் தேவை என்று கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார். அதே நேரத்தில்
"#GoHomeRajapaksas" மற்றும் "#GotaGoHome" என ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல நாட்களாக ஹேஸ்டேட்டுகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்த நாட்டிலேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+