ஏமாந்த ஈழத்தமிழர் பொதுவேட்பாளர்.. இலங்கை அதிபர் தேர்தலில் பிரியும் தமிழ் ஓட்டுகள்.. கடும் அதிர்ச்சி
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஈழத்தமிழர் பொது வேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் ஒரு தரப்பினர் அரியநேந்திரனுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் நிலையில் மற்றொரு தரப்பு அவருக்கு எதிராக ஓட்டளித்து வருகின்றனர். இதனால் ஈழத்தமிழர் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் என்பது இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2022ல் நடந்த பொருளாதார நெருக்கடி, வன்முறைக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 38 பேர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர். முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சேவின் கட்சியில் இருந்து நாமல் ராஜபக்சே வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர். இவர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் ஆவார்.

அதேபோல் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, ஈழத்தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கி உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 35 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இன்று மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். அதன்பிறகு நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில் தான் ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு என்பது தேர்தலில் மாறி உள்ளது. இலங்கையை பொறுத்தமட்டில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஈழத்தமிழர்களை பிரித்துவிட்டு இலங்கையை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். தனிஈழ போரின்போது அதிகமாக பாதிக்கப்பட்ட இவர்களுக்கு இன்னும் சரியான வாழ்க்கை அமையவில்லை. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழப்போரில் குற்றம்புரிந்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது. மேலும் இலங்கை அரசியலில் சரியான அதிகாரம் கிடைக்காமல் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஈழத்தமிழரின் பொது வேட்பாளராக அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். ஈழத்தமிழர்கள் இலங்கையில் எதிர்கொண்ட சித்ரவதை, அடக்குமுறைக்கு தீர்வு ஏற்பட அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரியநேந்திரன் பிரசாரம் செய்தார். இன்று காலையில் அம்பிளாந்துரை கலைமகள் வித்தியாலயத்தில் அரியநேந்திரன் வாக்களித்தார். இத்தகைய சூழலில் தான் தற்போது அரியநேந்திரனுக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. அதாவது தமிழர்களின் ஓட்டு என்பது மொத்தமாக அவருக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஈழத்தமிழர்களின் 3 முக்கிய நிலைப்பாடு தான் காரணம். ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அரியநேந்திரனை ஆதரித்து ஓட்டு செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் அரியநேந்திரனுக்கு ஓட்டளித்தாலும் அவர் வெற்றி பெறப்போவது இல்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கே, சஜிதா பிரேமதாசா, அனுரா குமார திஸனநாயகே ஆகியோரில் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று ஓட்டு செலுத்தி வருகின்றனர். இன்னொரு தரப்பினரோ தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று நடக்கும் அதிபர் தேர்தலில் ஈழத்தமிழர் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு தமிழர்களின் வாக்குகள் மொத்தமாக கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் இலங்கையில் தமிழ் கட்சியினர் இடையே ஒற்றுமை என்பது இல்லை. இலங்கையில் தமிழரசு கட்சியின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலுவாக அமைப்பாக இருந்தது. இது ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அதன் நிர்வாகி சம்பந்தன் மறைவுக்கு பிறகு அந்த கூட்டமைப்பு என்பது சிதைந்துவிட்டது. இதனால் ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது ஈழத்தமிழர் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு பிரச்சனையாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications