இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.. போலீஸ் குவிப்பு
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிபர் நடந்து முடிந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் அமைதியான முறையில் நிறைவு பெற்றது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்ததாக சொல்கிறார்கள். இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களம் இறங்கினார். வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளை பிற்பகல் தெரியும். இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அதிபரை தேர்வு செய்யும் சூழல் மற்றும பிற சூழல் காரணமாக செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தேவைப்பட்டால் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிறு மாலை முதல் செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். இதனிடையே கொழும்பு விமான நிலையத்தில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications