கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்திய பிரபாகரன்- ரணில் விஷமப் பேச்சு- தமிழர்கள் கொந்தளிப்பு!

Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனைப் போல குழந்தைகளை, சிறுவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் தனிநாடு கோரி 30 ஆண்டுகால ஆயுதப் போர் நடத்தினர். பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய இந்த ஆயுதப் போராட்டம் உலக நாடுகளை அதிரவும் வைத்தது. 2009-ம் ஆண்டு உலக நாடுகளின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போரை நிர்மூலமாக்கியது இலங்கை அரசு. இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்தனர்.

மோடி எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.. விரைவில் இந்தியா வருவேன்.. நெருக்கடியை சமாளிக்க ரணில் பிளான்! மோடி எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.. விரைவில் இந்தியா வருவேன்.. நெருக்கடியை சமாளிக்க ரணில் பிளான்!

2009 இறுதி யுத்தம்

2009 இறுதி யுத்தம்

கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க சதி நடப்பதாக, நிதி சேகரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரணில் பேச்சு

ரணில் பேச்சு

இந்த பின்னணியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்று பேசினார். ரணில் பேசுகையில், இலங்கையில் போராட்டங்களின் போது குழந்தைகள், சிறுவர்களை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது; அண்மையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக நடந்த காலிமுகத் திடல் கிளர்ச்சியில் குழந்தைகள்- சிறுவர்கள் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என கூறினார்.

 பிரபாகரன் போல..

பிரபாகரன் போல..

மேலும் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், குழந்தைகள்- சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதைப் போல போராட்டங்களில் சிறார்களை பயன்படுத்தக் கூடாது. போலீசார் இத்தகைய போக்கை கடுமையாகத் தடுக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இனி வீதிகளில் நடைபெறும் போராட்டங்களில் குழந்தைகள்- சிறுவர்கள் பங்கேற்பதை போலீசார் அனுமதிக்க கூடாது என்றார்.

 தமிழர்கள் கொந்தளிப்பு

தமிழர்கள் கொந்தளிப்பு

ரணில் விக்கிரமசிங்கேவின் இந்தப் பேச்சு தமிழர்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது மண்ணின் விடுதலைக்காக.. சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் புலிகள் என சர்வதேச சமூகம் குற்றம்சாட்டிய போது விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து 18 வயதுக்கு குறைவானவர்களை இயக்கத்தில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதனை மறைத்து அபாண்டமாக பழிசுமத்துகிறார் ரணில் என்கின்றனர் தமிழர தரப்பினர்

English summary
Srilanka President Ranil Wickremesinghe said that using children as human shields like LTTE Chief Prabhakaran during demonstrations is a serious offence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X