போர் குற்றம்: அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை மாஜி கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு அதிரடி தடை!
கொழும்பு: இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும் வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் அவரது மனைவி, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இலங்கையில் தமிழீழம் தனி நாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை கடற்படை தளபதியாக இருந்தவர் அட்மிரல் வசந்த கரன்னகொட.

அக்காலப் பகுதியில் வசந்த கரன்னகொட மீது பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் 11 மாணவர்களை கடத்தி அவர்களது பெற்றோரிடம் பணம் பெற்றது; பின்னர் 11 மாணவர்களையும் காணாமல் ஆக்க செய்தது ஆகியவை மிக முக்கியமானவை. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு வசந்தர கொரன்னகடா இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வசந்த கரன்னகொட, இலங்கை வடமேற்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மனைவியுடன் செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார் வசந்த கரன்னகொட. அவரது விசா விண்ணப்பத்தை அமெரிக்கா அரசு நிராகரித்துவிட்டது. வசந்தர கரன்னகொட, அவரது மனைவி அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தாலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை விசாரணை அமைப்புகளிடம் ஆதாரங்களுடன் புகார்களை அளித்திருந்தன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது வசந்த கரன்னகொடவுக்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா அரசு.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications