சீனாவுக்கு மோடி வைத்த செக்.. இலங்கை அதிபர் அதிரடி அறிவிப்பு.. இந்தியாவுக்கு குட்நியூஸ்
டாக்கா: இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு இலங்கையை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் மோடியிடம், அந்த நாட்டின் அதிபர் அநுரகுமார திசநாயக்கே உறுதியளித்துள்ளார். இலங்கை வழியாக சீனா மூலம் நம் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பது உள்ள நிலையில் அவர் இந்த உறுதியை வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த BIMSTIC மாநாட்டை முடித்து கொண்டு நேராக இலங்கை சென்றார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இறங்கிய பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடந்தது. பிரதமர் மோடி - இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஆகியோர் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தனர். தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ராணுவம் சார்ந்த ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்திடப்பட்டது. இந்த வேளையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இலங்கையை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டாம் என்று பிரதமர் மோடியிடம் அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்கே உறுதியளித்தார்.
இதுபற்றி அநுர குமார திசநாயக்கே கூறும்போது, ‛‛இந்தியாவின் பாதுகாப்புக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைக்காக பிறநாடுகள் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இதனை நான் மீண்டும் உறுதியாக சொல்கிறேன். நாட்டின் வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்தக் கொள்கை முயற்சியை மேலும் தொடர பிரதமர் மோடியும் நானும் விவாதித்துள்ளோம். இலங்கையின் தனித்த டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி நிதியை மானியமாக வழங்கிய இந்தியாவுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையை பயன்படுத்தி சீனா நம் நாட்டை மிரட்டி வருகிறது. இலங்கையின் கடலில் உளவு கப்பல்களை நிறுத்தி சீனா நம்மை உளவு பார்த்த சம்பவங்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது நம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவின் பாதுகாப்பு அச்சறுத்தலை ஏற்படுத்தும் செயல்களை இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று அந்த நாட்டின் அதிபர் அநுரகுமார திசநாயக்கே அறிவித்துள்ளார்.
இலங்கையை பயன்படுத்தி நம்மை சீண்ட நினைத்த சீனாவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications