மன்னார் வளைகுடா எண்ணெய் வளத்தையும் சீனாவுக்கு தாரை வார்க்க செக்- இலங்கையில் இந்திய ராணுவ தளபதி!
கொழும்பு: தமிழக கடற்பரப்பில் வங்க கடலில் மிக முக்கியமான மன்னார் வளைகுடா பகுதியின் எண்ணெய் வளத்தையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்க்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய செய்திகளின் பின்னணியில் இந்திய ராணுவ தளபதி நரவனேயின் இலங்கை பயணம் மிக முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்களர் வாழும் தென்னிலங்கை பகுதியில் இதுவரை சீனாவின் ஆதிக்கம் உள்ளது.
தற்போது தமிழர்களின் தாயக நிலமான வடக்கு, கிழக்கிலும் சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்கிறது. இதற்கு துணை போகும் வகையில் மன்னார் வளைகுடாவில் பிரமாண்ட காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை சீனாவுக்கு கொடுத்தது இலங்கை. இதற்கு இந்தியா அரசு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் காலனியாக...
இலங்கைக்கு குறுகிய கால கடன்களை அள்ளிக் கொடுத்து அதன்மூலம் இலங்கையின் நிலப்பரப்புகளை அபகரித்து சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கி காலனி பகுதிகளாக்குவது சீனாவின் திட்டம். இதனை படிப்படியாக சீனா செயல்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். ஆகையால் தற்போது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

அடுத்தடுத்து சந்திப்புகள்
அண்மையில் நியூயார்க்கில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஷை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் இலங்கை சென்றார். இதன் தொடர்ச்சியாக 5 நாட்கள் பயணமாக இந்திய ராணுவ தளபதி நரவனே தற்போது கொழும்பில் முகாமிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை நரவனே சந்தித்து பேசினார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ராணுவ தளபதி நரவனே பங்கேற்றார். இந்திய ராணுவ தளபதியின் தற்போதைய இலங்கை பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.

சர்வதேச அரசியல்
இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடன் இணக்கமானப் போக்கை கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவுக்கு ராணுவ ரீதியில் சாதகமான 3 ஒப்பந்தங்களை இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவை நட்பு நாடாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா இன்னொரு பக்கம் இந்தியாவை தனிமைப்படுத்தும் சூழ்ச்சிகளிலும் இறங்கி இருக்கிறது. அண்மையில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளையும் அமெரிக்கா நடத்தியது. இது இந்திய தரப்புக்கு கடும் ஏமாற்றமாகும்.

இந்தியாவின் திட்டங்கள்
அமெரிக்காவின் இத்தகைய போக்கை தடுக்க தெற்காசிய பிராந்தியத்தில் தமது வல்லாண்மையை மீண்டும் காட்ட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் முதல்படியாக இலங்கை-சீனா உறவின் நெருக்கத்தை கட்டுப்படுத்துவது, இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற இரு இலக்குகளில் இந்திய வெளியுறவுக் கொள்கை பயணிப்பதாகவே தெரிகிறது. திருகோணமலையில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு குறிப்பிட்ட அளவு தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன எண்ணெய் டேங்குகள். எஞ்சிய எண்ணெய் டேங்குகளையும் முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் இந்திய அரசு எடுத்துக் கொள்வது என்பது முதல் கட்டமாக சொல்லப்படுகிறது.

மன்னார் வளைகுடாவில் செக்
அடுத்ததாக மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் இருக்கிறது என்று 2001-ன் இறுதியில் நார்வேயின் நிறுவனங்கள் உறுதி செய்தன. அதன்பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இந்த எண்ணெய் படுகை இந்திய கடற்பரப்புடன் இணைந்ததாகவே இருக்கிறது. ஆகையால் இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கையால் இதனை செயற்படுத்த முடியாது. இப்போது இந்த எண்ணெய் வளத்தை சீனாவுக்கு இலங்கை தாரை வார்க்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தடுத்தாக வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த எண்ணெய் வளத்தை அகழாய்வு செய்யும் பணியை இந்தியா தம் வசமாக்கலாம் என்பது 2-வது கட்டம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இத்தகைய ராஜதந்திர நடவடிக்கைகளுக்காகத்தான் அடுத்தடுத்த இலங்கை பயணங்கள் இந்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications