ராஜபக்ச சகோதரர் பசில் ராஜபக்ச ராஜினாமா.. எம்.பி பதவியில் இருந்து திடீர் விலகல்.. இதுதான் காரணமா?
கொழும்பு : இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சவின் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், தற்போது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் பசில்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்ய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாக உள்ளதன் காரணமாகவே, அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடி
நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் கடந்த மே மாதம் 9ஆம் தேதி வன்முறையாக மாறியது. அந்த வன்முறைகளில் எம்.பி உள்ளிட்ட சுமார் 10 பேர் உயிரிழந்தனர். 200ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடே தீ வைக்கப்பட்டு வன்முறைக் களமானது.

மகிந்த ராஜபக்ச
இதையடுத்து, பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக பதவியேற்றார். சமீபத்தில் அவரே நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றார். இலங்கையின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச
இந்நிலையில், இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியதால் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பசில் ராஜபக்சவை நீக்கினார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஒரு மாதத்தில் பசில் ராஜபக்சே எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவேன்
இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பசில் ராஜபக்ச. எம்.பி பதவியை ராஜினாமா செய்தது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பசில் ராஜபக்ச, இனி தாம் எந்த ஒரு அரசு நிர்வாக பதவியையும் வகிக்கப் போவதில்லை என்றும் ஆனால் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன
பசில் ராஜபக்ச, தந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பவர் பசில் ராஜபக்ச. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்ய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாக உள்ளது. இந்நிலையில் தனது பதவியை பசில் ராஜபக்சே ராஜினாமா செய்திருக்கிறார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications