கடலூர் பள்ளி: முதலில் மாணவர்.. அடுத்து மாணவி! அடுத்தடுத்து தற்கொலை முயற்சி - அதிர்ச்சி காரணம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ராமாபுரம் பகுதியில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பூச்சி மருந்து அருந்திய மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி பூச்சி மருந்து சாப்பிட்டு இருக்கிறார்.

2 Students in from a same school in Cuddalore attempted suicide

இதனை கண்ட சக மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து அவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

2 Students in from a same school in Cuddalore attempted suicide

இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பாதிரிப் புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற மாணவி பள்ளியில் படித்து வந்த சக மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தோல் வியாதி இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக தனது அந்த மாணவனிடம் தெரிவித்துள்ளார்.

2 Students in from a same school in Cuddalore attempted suicide

இதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறியதை கேட்டு, மாணவர் முதலில் பூச்சி மருந்து குடித்ததாகவும் அதன் பின்னர் மாணவியும் பூச்சி மருந்து குடித்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவனும் மாணவியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+