பைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் மூன்று மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த அரங்கமங்கலம் ஊராட்சி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் வினிதா (25). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்

பெற்றோர்

திருமணத்தின் போது வினிதாவுக்கு அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் தங்க நகை, கட்டில் , பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர். மேலும் ராஜன் கார் வேண்டும் என சீர்வரிசையாக கேட்டுள்ளார். இதற்கு வினிதாவின் பெற்றோர் காருக்கு பதிலாக ரூ . 1.50 லட்சம் பணம் கையில் கொடுத்துள்ளனர்.

தகராறு

தகராறு

இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி வினிதாவிடம் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அறுவடை

அறுவடை

இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர் வினிதாவிடம் கூறியதை அடுத்து அவர் அதை அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன் என கூறியதாக தெரிகிறது.

அறுவடை

அறுவடை

இதனிடையே ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வினிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறி, கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை. அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கணவன் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மாமியார்

மாமியார்

இதனிடையே ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வினிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறி, கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை. அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கனவனும் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறபடுகிறது.

இறந்துவிடு

இறந்துவிடு

இதனால் விரக்தியடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவைத்து தற்கொலை

தீவைத்து தற்கொலை

இதனால் விரக்தியடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறபடுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்தார் வினிதா

இறந்தார் வினிதா

மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினிதா இறந்தார்.

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில் சிகிச்சையின் போது வினிதா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் , கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேல் விசாரணை

மேல் விசாரணை

இது குறித்து வினிதாவின் தாயார் செல்வி குறிஞ்சிப்பாடி போலீசில் அளித்த புகாரின் பேரில் கணவர் ராஜன் , தந்தை சேட்டு , தாய் கஸ்தூரி , சகோதரன் ராமச்சந்திரன் , சகோதரிகள் ராஜேஸ்வரி , அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் ராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். வினிதாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் கடலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+