என்ன கனவில் இருந்தார்களோ.. கடலூர் சில்வர் பீச்சில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ஒரு மாணவன் மாயம்
Recommended Video

கடலூர்: கடலூரில் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சந்தோஷத்தை கொண்டாட கடலூரில் உள்ள சி.கே. என்ற தனியார் பள்ளியில் பயாலஜி படித்து வரும் மாணவர்கள் 9 பேர் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளனர்.

அலையில் சிக்கிய மாணவர்கள்
அதில் 5 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி தவித்துள்ளனர். இதை பார்த்த கடலில் குளித்துக் கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்கள் அலையில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒரு மாணவர் பலி
5 பேரில் தனீஷ்வர், விக்னேஷ் என்ற இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீஹரி என்ற மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

தேடல்
அபினேஷ் எனும் மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பரணி என்ற மாணவனை காணவில்லை. அவரை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

அழுகை
பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்ற கனவுடன் இந்த மாணவர்கள் இருந்தனரோ தெரியவில்லை. தேர்வு முடிந்ததை கொண்டாட வந்துவிட்டு இதுபோல் நடந்துவிட்டதே என மற்ற மாணவர்கள் கதறி அழுதனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications