கடலூர் அருகே கோர விபத்து.. 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி..முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
கடலூர்: பண்ருட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பஸ் எதிரில் வந்தது. இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் டிரைவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். எதிரில் தாறுமாறாக வந்த பஸ் மோதாமல் இருக்க, சாலை ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றார். இருந்தபோதும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பஸ், எதிரில் வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். இதில் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறை வீரர்களை உதவிக்கு அழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாலிபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலத்த காயமடைந்தவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே பண்ருட்டி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.25,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications