விருத்தச்சாலம்.. எம்எல்ஏ கலைச்செல்வனை வேட்பாளராக அறிவிக்க கோரி அதிமுகவினர் போராட்டம்.. பாமக ஷாக்
கடலூர்: விருத்தாசலம் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி பாமக விற்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், அதிமுக வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியை மீண்டும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
அத்துடன் விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தினர். பாமகவிற்கு தொகுதிகயை ஒதுக்கியதற்கு , கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.
அப்போது மீண்டும் எம்எல்ஏ கலைச்செல்வனை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியல் செய்ய முயன்ற போது தொண்டர் ஒருவரை போலீசார் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications