Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு - சட்ட அமைச்சர் ரகுபதி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டதாக 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 Appeal against bail of Kallakurichi school administrators - Minister Regupathy

மேலும், மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ3.73 கோடி மதிப்பில் பணிமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியவதாவது: கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும். தமிழகத்திலேயே சிறை துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ததின் அடிப்படையில், சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார். போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை பொருட்கள் கடத்தல் குற்றவாளிகள் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+