"ஓ, க்ரைமா நீ.." படைவீரரை கத்தியால் குத்திய கஞ்சா மணிக்கு மாவுகட்டு.. கடலூரிலும் பாத்ரூம் சரியில்லை!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "ஓ.. என்னையே புடிக்க வர்றியா.. நான் யார் தெரியுமா.. நானே இப்பதான் ஜெயில்ல இருந்து வெளியே வந்திருக்கேன்.. கஞ்சா விக்கிற இடத்துல உனக்கு என்ன வேலை" என்று சிஐஎஸ்எப் வீரரை தகாத வார்த்தைகளால் திட்டி.. கத்தியால் குத்தி.. இன்னொரு வீரரையும் முட்டி போடவைத்த கஞ்சா மணி கைதானான்.. ஆனால் தப்பி ஓடும்போது, வழுக்கி விழுந்ததில் கை, கால்களில் மணிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதாவது சிஐஎஸ்எப் வீரராக என்எல்சி 2-வது சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். 4 நாளைக்கு முன்பு வேலையில் இருந்தபோது, மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கஞ்சா மணி அங்கே நண்பர்களுடன் வந்துள்ளார்.

சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் காப்பர் கம்பிகளை திருட முயன்றபோது, செல்வேந்திரன் இதை பார்த்துவிட்டார். அதனால் மணியை பிடிக்க முற்படும்போது, கஞ்சா மணி, கையில் தயாராக வைத்திருந்த கத்தியால் செல்வேந்திரனை குத்திவிட்டு, அங்கிருந்து ஓடினார்.. இதை பார்த்த சக வீரர்கள், செல்வேந்திரனை மீட்டு என்எல்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாவி

சாவி

இதனிடையே தப்பிச்சென்ற கஞ்சா மணியை இன்னொரு பாதுகாப்பு படை வீரர் தாசும் மற்றொரு வீரரும் முயன்றனர்.. அங்கிருந்து பைக்கில் கஞ்சா தப்பித்துபோகாமல் இருக்க அந்த சாவியை பிடுங்கி வைத்து கொண்டார்.. இதை பார்த்த கஞ்சாமணிக்கு ஆத்திரம் வந்தது.. கஞ்சாமணியும், நண்பர்களும் தாஸை சுற்றி வளைத்து கொண்டனர்.. கடுமையான தாக்கினர்.

கிரைமா நீ?

கிரைமா நீ?

அங்கேயே கத்தியை காட்டி முட்டி போட வைத்தனர். உடனே தாஸ், "சாரி.. நான் தெரியாம பண்ணிட்டேன்" என்று சொல்ல.. "என்னது, ஸாரியா? என்னையே புடிக்க வர்றியா.. கஞ்சா விக்கிற இடத்துல உனக்கென்ன வேலை? க்ரைமா நீ? நானே இப்பதான் குண்டாஸ்ல இருந்து வெளியில வந்தேன்.." என்று சொல்லி அசிங்கமாக தாஸை திட்டுகிறார்.

தனிப்படை

தனிப்படை

இந்த சம்பவம் அனைத்தையும், தாஸுடன் சென்ற இன்னொரு வீரர் செல்போனில் வீடியோ எடுத்தார்.. அதை பார்த்ததும் இன்னும் கொதித்துபோன கஞ்சா மணி, அவரையும் கத்தியால் தாக்கினார்.. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது... கையில் கத்தியுடன் சுற்றி கொண்டிருக்கும் கஞ்சா மணியை பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். சிறப்பு தனிப்படையினரும் கஞ்சாமணியை பிடிக்க வரும்போதுதான், கஞ்சாமணியும் மற்ற 4 பேரும் அங்கிருக்கும் சுவர் ஒன்றில் ஏறிகுதித்து தப்பி ஓடியுள்ளனர்.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கஞ்சா மணி வழுக்கி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.. வலது கை, இடது கால், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மணியை போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து.. மாவுகட்டு போட ஏற்பாடு செய்தனர். பின்னர் மற்ற 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரில் ஒருவர் மைனர் என்பதால், அவரை மட்டும் கோர்ட் விடுத்து, மற்ற 3 பேருக்கும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டது.

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

இந்த கஞ்சா மணி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவனாம்.. பொதுவாக இந்த சட்டத்தில் கைதானால் 12 மாசம் ஜெயில் தண்டனை இருந்தாலும் ஜாமீனும் கிடைக்கும்.. அப்படி ஒரு ஜாமீனை வாங்கி கொண்டு 3 மாசத்திலேயே வெளியே வந்தவன்தான் கஞ்சா மணி.. இப்போதும் கைதாகி உள்ளதால், இந்த சிறைவாசம் எத்தனை நாளோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+