பெங்களூரில் யாரிந்த பொண்ணு.. சோப்பு தண்ணியை குடித்து.. கணவர் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் இப்படியா?
கடலூர்: இந்தியாவில் சமீபகாலமாகவே தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகிவிட்டன.. குறிப்பாக இளைய தலைமுறையினரின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற தற்கொலைகளுக்கு, பெரும்பாலும் புரிதல் குறைபாடுகளே காரணம் என்றும் மனநல மருத்துவர்கள் வேதனை கூறுகிறார்கள்.. இதோ நேற்றுகூட ஒரு பகீர் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜெயாநகர் பகுதியில் வசித்து வருகிறார் சல்மான் பாஷா... இவர் குவைத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார்.. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, சையது நிகாத் என்ற பெண்ணுடன் சல்மான் பாஷாவுக்கு திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

2 வது குழந்தை கர்ப்பம்
இதில் 2வது குழந்தை பிறப்பதற்கு முன்பேயே அதாவது மனைவி கர்ப்பமாக இருந்தபோதே சல்மான் பாஷா மறுபடியும் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.. அப்போதிருந்தே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடித்து வந்துள்ளது..
ஒருகட்டத்தில் மனவேதனை அடைந்த நிகாத், தன்னுடைய குழந்தைகளுடன், அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.. இதனிடையே, சொந்த ஊர் திரும்பிய கணவர், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சமாதானம் செய்து அழைத்துள்ளார். ஆனால், மனைவி அதனை ஏற்கவில்லையாம்.. 2 குழந்தைகளையும் பார்க்க விடாமல், சல்மான் பாஷைவை விரட்டியடித்துவிட்டாராம் நிகாத்.
தற்கொலை முயற்சி
இதனால் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்த சல்மான் பாஷா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்ட சல்மான் பாஷா,
"என்னுடைய மனைவியும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய மனைவிக்கு சையது புர்ஹான் உதீன் என்பவருடன் கள்ளக்காதல் இருக்கு..
ஃபேஸ்புக் லைவ்
அந்த கள்ளக்காதலன் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. இது சம்பந்தமாக போலீஸில் புகார் தந்தாலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள்" என்று ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் கூறியபடியே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
இந்த லைவ் வீடியோவை பார்த்து பதறிப்போன குடும்பத்தினர், சல்மான் பாஷாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தற்போது சல்மான் பாஷாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது,
சோப்பு தண்ணீரை குடித்து டிராமா
ஆனால், சல்மான் பாஷா கூறிய குற்றச்சாட்டை நிகாத் மறுத்துள்ளார்.. இது தொடர்பாக போலீசிலும் புகார் தந்துள்ளார்.. இதற்கு முன்பும் இப்படித்தான், தன்னை மிரட்டுவதற்காக சோப்பு தண்ணீரை குடித்து டிராமா செய்ததாக கணவர் மிரட்டினாராம். தான் வேலை பார்க்கும் இடத்திற்கே வந்து ஆசிட் வீசுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்ததாக நிகாத் குற்றஞ்சாட்டியிருக்கிறார். .
தற்போது இரு தரப்பினருமே புகார் அளித்துள்ளதால், இதில் யார் மீது தவறு? என்று தெரியவில்லை. எனவே, போலீசார் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. மனைவி தன்னை டார்ச்சர் செய்வதாக இளைஞர் பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை இணையவாசிகளிடம் ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் நந்தினி
கடந்த வாரம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும் இப்படியொரு லைவ் தற்கொலை நடந்தது.. எருமனூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷினி என்ற 18 வயது பெண், அங்குள்ள இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. சம்பவத்தன்று காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் தகராறு வந்துள்ளது.
அப்போது தர்ஷினி பேசிக்கொண்டே, அங்கிருந்த ரூமில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதனை வீடியோ காலில் பார்த்
பார்த்துக் கொண்டே இருந்த அந்த இளைஞர், போனை துண்டித்துவிட்டு, அருகிலிருந்தவர்களுக்கு தகவல் தந்தார். ஆனால், அதற்குள் தர்ஷினி பிணமாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications