திமுக ஆதரவு வேட்பாளரை வீழ்த்துவதே இலக்கு.. பாஜக குழு அமைக்க காரணமே அதுதான்.. கேபி ராமலிங்கம் பேட்டி!
கடலூர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிப்பதே பாஜகவின் இலக்கு என்று அக்கட்சியின் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்தவே தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதாக கூறிய கேபி ராமலிங்கம், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. இதனை திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டியது மட்டுமே வேலையாக இருக்கிறது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழபம் நீடித்து வருகிறது.

களமிறங்கும் அதிமுக
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அக்கட்சியின் ஜிகே வாசனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு எட்டப்பட்டு, அதிமுக போட்டியிடுவதை தமாகா வரவேற்றுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கப்படவில்லை. அதேபோல் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கிறது.

பாஜக தனித்துப் போட்டி
குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின், முதல் கட்சியாக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை போல் பாஜக தனித்து போட்டியிட்டு வேட்பாளரை களமிறக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக செயற்குழு
இந்த நிலையில் கடலூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் கேபி ராமலிங்கம், நாராயணன் திருப்பதி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இதனைத் தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் மற்றும் நாராயணன் திருப்பதி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோமா என்பதை மாநில தலைவர் அண்ணாமலை தேசிய தலைமையுடன் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

முடிவு சொல்லவில்லை
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். திமுக கூட்டணியை வீழ்த்துவதே பாஜகவின் இலக்கு. அதற்காகவே தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறோம். திமுகவுக்கு எதிராக நிச்சயம் நாங்கள் களமிறங்குவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக போட்டியிடுவதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு கேபி ராமலிங்கம், நாங்கள் இன்னும் முடிவை சொல்லவில்லையே என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications