Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல்! குவிந்த பிரியாணி ஆர்டர்கள்! அண்டா அண்டாவாக நான்-ஸ்டாப்பாக தயாரித்த மாஸ்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த லோக்சபா தேர்தலையொட்டி பிரியாணி மாஸ்டர்களுக்கு உணவு ஆர்டர் இருந்து கொண்டே இருந்ததால் அவர்கள் ஓய்வே இல்லாமல் பிஸியாகவே இருந்தனர்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்குமான லோக்சபா தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை காட்டிலும் இந்த முறை குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளது.

Briyani masters were busy yesterday to cook food for tamilnadu lok sabha election Booth agents

தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்கு பதிவு முடிந்தவுடன் அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அது வரை பூத் ஏஜென்டுகள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேறவே கூடாது. இதனால் பூத் ஏஜென்டுகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அவ்வப்போது தேவையான உணவு, தண்ணீர் பாட்டில்களை அரசியல் கட்சியினர் வழங்கி வந்தனர்.

பூத் ஏஜென்ட்களின் பங்கு அளப்பரியது. அது போல் தொகுதியில் மற்ற கட்சியினரால் கலாட்டா நடைபெறாமல் இருக்க பூத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும் காத்திருப்பார்கள். இவர்களுக்கு சுடச்சுட பிரியாணியை அந்தந்த கட்சியின் வேட்பாளர்கள் வழங்கினர்.

இதற்காக ஓட்டல்களை நாடாமல் தனியாகவே சமையல் கலைஞர்களை வைத்து தனியார் இடத்தில் சமைத்து அவை பார்சல் செய்யப்பட்டு நேற்று மதியம் அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஷ்கா என பூத்தை சுற்றி பிரியாணி வாடையே இருந்தது.

இது மட்டுமல்லாமல் சில அரசியல் கட்சியினர் ஹோட்டல்களில் கூட பிரியாணிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். இதனால் ஹோட்டல்களில் உள்ள பிரியாணி மாஸ்டர்களும் பிஸியாகவே இருந்தனர். அண்டா அண்டாவாக பிரியாணியை சமைப்பதும் அதை பார்சல் கட்டுவதும், அது காலியானால் மீண்டும் ஒரு அண்டாவில் பிரியாணியை ரெடி செய்வதுமாக இருந்தனர். சுருக்கமாக சொன்னால் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல் ஆர்டர், பிரியாணி, பார்சல் ரிப்பீட்டு என்றுதான் இருந்தது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+