Chennai Trichy highway: சென்னை திருச்சி ஹைவேயில் ஆம்னி பஸ் - கார் மோதி பயங்கரம்.. கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
கடலூர்: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (Chennai Trichy highway) கடலூர் திட்டக்குடி அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கல்லூர் மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில், மேல்மருவத்தூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் மற்றும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

ஆம்னி பஸ் மீது மோதி விபத்து
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 6 பேர் காரில் வந்துகொண்டிருந்தனர். திட்டக்குடி அருகே உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பயின்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் திடீரென சாலையில் தடுப்பின் மீது ஏறி மறுபக்கம் சென்றது.
3 பேர் உயிரிழப்பு
இதில் அந்த சாலையில் மேல்மருவத்தூரில் இருந்து பெரம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது கார் மோதியது. கார் - ஆம்னி பஸ் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications