பாப்பாவுக்கு என்ன வயசாகுது.. ஏன் 3 பேர் வந்தீங்க.. அதிர வைத்த போலீஸ்காரர்.. வைரலாகும் வீடியோ

டூவீலரில் வந்த குழந்தைகளுக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டூவீலரில் வந்த குழந்தைகளுக்கும் அபராதம் விதித்த போலீசார்-வீடியோ

    கடலூர்: "பாப்பாவுக்கு என்ன வயசாகுது.." என்று கேட்ட அந்த போலீஸ்காரர்தான் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக்!

    சிதம்பரத்தில் ஒரு தம்பதி டூவீலரில் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கஞ்சித்தொட்டி முனை அருகே அவர்கள் வந்தபோது, 2 வாகன போலீசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், இன்னொரு போலீஸ் சார்லஸ்!

    chidamabaram traffic police viral video

    குழந்தைகளை வண்டியில் ஏற்றி வந்ததற்கு போலீசார் ஃபைன் போட்டுள்ளனர். இது சம்பந்தமாக அந்த போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    போலீஸ்காரர்: பாப்பாக்கு என்ன வயசாகுது?

    நபர்: இவ ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறாள்

    போலீஸ்காரர்: 2 சக்கர வாகனம் ஓட்டினால் 2 பேர் தான் ஓட்டணும்.. 3 பேர் எல்லாம் கிடையாது

    நபர்: புரியல சார்.. அதுக்குன்னு குழந்தையை வீட்டிலயா விட்டுட்டு வர முடியும்?

    போலீஸ்காரர்: அது உங்க கஷ்டம் சார்..ஒரு வண்டியில 2 பேர் தான் போணும்

    நபர்: சார்.. இது சுத்தமா லாஜிக்கே இல்லை.. பசங்களை வீட்டுல எப்படி சார் விட்டுட்டு வர முடியும்? நீங்களே சொல்லுங்க.

    போலீஸ்காரர்: அது கவர்ன்மென்ட்டுல கிடையாது சார்..

    நபர்: அப்படின்னா கவர்ன்மென்ட்டுல என்ன சார் சட்டம் போட்டிருக்காங்க?

    போலீஸ்காரர்: 2 சக்கர வாகனம்.. 2 பேர்தான் கணக்கு

    நபர்: சார்.. ஹெல்மட் போடாம வண்டி ஓட்டுறாங்க இல்லை.. முதல்ல அவங்களை பிடிங்க. அதை விட்டுட்டு லாஜிக்கே இல்லாமல் சொல்லிட்டு இருக்கீங்க.

    பொதுமக்கள்: ஏம்ப்பா.. நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க.. ஏன் சார்.. இவர் ஹெல்மட் போட்டிருக்காரு.. பேப்பர்ஸ் பக்காவா வெச்சிருக்காரு.. இப்படி குழந்தைங்களை கூட்டிட்டு வந்ததுக்கு போயி ஃபைன் போட்டிருக்கீங்களே?

    போலீஸ்காரர்: நான் ஒன்னும் அவங்களை கூட்டிட்டு வர சொல்லலியே...

    அந்த நபரின் மனைவி: சார்.. ப்ளீஸ்.. ஏன் இவ்ளோ ஃபைன் போடறீங்க.. குழந்தைங்களுக்காக பாருங்க சார்..

    போலீஸ்காரர்: இங்க பாரு.. நீ வெச்சிருக்கிற ஆர்சி புக்குல எதுவும் கிளியரா இல்லை.. இது ஜெராக்ஸ்.. ஒரிஜினல் குடு.. உங்க வசதிக்கு நீங்க ஜெராக்ஸ் வெச்சிப்பீங்களா?

    அந்த நபரின் மனைவி: அடுத்த முறை கண்டிப்பா ஒரிஜினல் எடுத்துட்டு வர்றோம்.. இந்த ஒரு முறை விட்டுருங்க.. ப்ளீஸ் சார்.. பெரிய ஆளுங்களை நாங்க கூட்டிட்டு வரலயே..

    இப்படி அந்த விவாதம் தொடர்கிறது.. சுற்றிலும் மக்கள் கூட்டம் இதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே நிற்கிறார்கள். இந்த வீடியோதான் வைரலாகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+