Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பர ரகசியம்.. அண்ட சராசரம்.. பிரம்மாண்டம்.. உலகமே வியக்கும் நடராஜர் நடனம் உணர்த்தும் தத்துவம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நடராஜர் என்ற சொல்லுக்கு நடன + ராஜன் அதாவது நடனத்தின் நாயகன் என்று பொருள். நடராஜர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன். நம்முடைய பாரத தேசம் வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நடராஜர் சிலையை டெல்லியில் பாரத மண்டபத்தில் நிறுவியுள்ளனர்.

சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்திற்குரிய தலமாகும். எல்லையில்லாமல் இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான் என்ப அருவமாக சிவ பெருமான் இங்கு அருள் செய்கிறார். உருவமாக நடராஜரையும், அருவுருவான லிங்க ரூபமாகவும் சிவ பெருமானை தரிசிக்க முடியும். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களிலும் காணப்படும் நடராஜர் திருமேனி அமைப்பு"ஷட்கோண' வடிவில் அமைந்திருக்கும். சிதம்பரத்தில் மட்டும் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கி உள்ளதைக் காண முடியும்.

Chidambara Ragasiyam, Natarajar cosmic dance, The symbolism of Nataraja, the Cosmic Dancer,

நடராஜர் வடிவில் இரு பக்கமும் விரிந்திருக்கும் சடையுடன் கூடிய நடன தோற்றம் உயிர்களுக்கு இறைவன் இடைவிடாது செய்யும் ஐந்து தொழில்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. நடராஜரின் வலது கால் முயலகனின் மீது ஊன்றி இருக்கும். இது ஆணவ எண்ணத்தைக் குறிக்கிறது. இறைவனின் மறைத்தல் தொழிலை இது உணர்த்துகிறது.

இடது கால் தூக்கிய திருவடியானது சிவனின் அருளல் தொழிலைக் குறிக்கின்றது. இந்த திருவடியை இடது கையில் விரல் ஒன்றைச் சுட்டிக்காட்டி அருளல் தத்துவத்தை உணர்த்துகிறது. நடராஜரின் வலது கை உடுக்கை ஏந்தி இருக்கும். இது படைத்தல் தொழிலைக் குறிப்பிடுகிறது.

தீயை ஏந்தி இருக்கும் நடராஜரின் இடது கை அளித்தல் தொழிலைக் குறிக்கிறது. காத்தல் தொழிலைக் குறிப்பிடுவதற்காக நடராஜரின் வலது அபய கரம் இருக்கிறது. இதையே நடராஜனின் நடன தத்துவம் உணர்த்துகிறது.

காஞ்சியில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரம் தரிசிக்க முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பர். தரிசிக்க முக்தி தரும் தலம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சிதம்பரம் (சித்+அம்பரம்) என்னும் சொல்கு ஆகாயம் (அம்பரம்) என்று பொருள்படும். பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் இத்தலம் இப்பெயர் பெற்றது

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் யாரும் பார்க்காத நிலையில் இந்த யந்திரம் உள்ளது. இது ரூபம், அரூபம் ஆகியவற்றின் இணைவாகும். இவை இரண்டையும் சிதம்பரத்தில் காண முடியும். நடராஜரின் சிலையை சுற்றி இருக்கும் திருவாச்சி வடிவம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் குறிப்பிட்ட அண்ட பேராற்றல், அதிர்வலைகளை குறிப்பதாகும்.

நடராஜரின் நடன தத்துவம் பற்றி சித்தர்களின் குரல் என்ற முகநூல் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தி ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்! அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம். ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.
வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும். முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+