சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகள் எவ்வளவு?..2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு - தீட்சிதர்கள் ஒத்துழைப்பு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவில் ஆவணங்கள், தங்க நகைகள் தொடர்பான ஆய்வு இன்றும் நடைபெற உள்ளது.
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு கோவிலில் நகைகளை சரிபார்த்து மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் எதிர்ப்பு இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகைகளை மீண்டும் சரிபார்க்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அறநிலையத்துறை அதிகாரிகள் கடிதம்
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர்கள் கடிதம் எழுதினர். அதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு செய்ய அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர். இருப்பினும் கடந்த ஜூன் மாதம் இந்து சமய அறநிலையத்துறையினர் நடராஜர் கோவிலுக்கு நகை சரிபார்ப்பு பணிக்காக சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பொது தீட்சிதர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் இந்துசமய அறநிலையத்துறையினர் நகையை சரிபார்க்காமல் சென்று விட்டனர்.

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள்
அதனை தொடர்ந்து நடராஜர் கோவில் நகைகளை சரிபார்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி பொது தீட்சிதர்களுக்கு அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதற்கு மறுப்பு தெரிவித்து பதிலுக்கு பொதுதீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு கடிதம் அனுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி கடிதம் அனுப்பினர்.

மாறி மாறி கடிதம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நகைகளை சரிபார்க்க வருவதாக இந்து அறநிலையத்துறை ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார்கள். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கோவில் பொது தீட்சதர்கள் முறையான அறிவிப்பு இல்லாமல், போதிய அவகாசம் இல்லாமல் ஆய்வுக்கு வரக்கூடாது என்றும், அப்படி வர வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து இம்மாதம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆய்வுக்கு வரலாம் என கடிதம் அனுப்பினார்கள்.

அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
அதன்படி தமிழக அறநிலையத்துறை திருவண்ணாமலை துணை ஆணையாளர் மற்றும் நகை சரி பார்ப்பு அலுவலர் குமரேசன் கடலூர் துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலர் ஜோதி, விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், மற்றும் நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் திருச்சி தர்மராஜன் திருவண்ணாமலை குமார் விழுப்புரம் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் நகைகளை சரி பார்க்க நடராஜர் கோவிலுக்கு ஆய்வு குழுவினர் வந்தனர்.

தங்க நகைகள் மதிப்பீடு
நேற்று காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறையின் தங்க நகைகள் மதிப்பீட்டு குழுவினர், நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் தேவசபையில் அமர்ந்து நகைகளை ஆய்வு செய்வது தொடர்பாக தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி நகை இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து நகைகள் இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கு கோவில் நகைகளை தீட்சிதர்கள் எடுத்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதனை அவர்கள் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

15 ஆண்டுகளுக்குப் பின் ஆய்வு
அறநிலையத்துறையினர் ஆய்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து நடராஜர் கோவில் நகைகளை தமிழக அரசு அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நகைகளை சரிபார்க்க அறநிலையத்துறை அதிகாரிகள் வரவில்லை. இந்த நிலையில் தற்போது ஆய்வுக்கு வந்துள்ளனர்.

கணக்கு வழக்கு வெளிப்படைத்தன்மை
இனிவரும் காலங்களில் நடராஜர் கோவிலில் வெளிப்படை தன்மையாக கணக்கு வழக்குகளையும் நகை விவரங்களையும் ஒவ்வொரு வருடமும் ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு தணையாளர்களைக் கொண்டு தணிக்கை செய்து, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார். இதனிடையே இன்றும் சிதம்பரம், நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவில் ஆவணங்கள், தங்க நகைகள் தொடர்பான ஆய்வு இன்றும் நடைபெற உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications