Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்..ஆதாரம் இதோ.. அம்பலமான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்று தீட்சிதர்கள் கூறி வந்த நிலையில் வீடியோ வெளியான பின்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வெளியாகவில்லை.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட சமூகநலத் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

Child marriage video release at Chidambaram Natarajar temple

விசாரணையை அடுத்து நான்கு குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
புகாரின் பேரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செயலாளர் ஹேமசபேசன் தீட்சிதர் உட்பட சிலரைக் கைதுசெய்தது காவல்துறை. இதைக் கண்டித்து சக தீட்சிதர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். "சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். உண்மையில் அங்கே குழந்தைத் திருமணங்கள் நடக்கவில்லை என்று ஆளுநர் ரவி கூறினார்.

குழந்தைகளின் பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறுமிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு இருவிரல் பரிசோதனை எனும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்தக் கொடுமைகளால் அந்தக் சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஆளுநர் ஆர்என் ரவி மீண்டும் எழுப்பவே, இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது.ஆளுநர் குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது. கடந்த மே மாதம் 24ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் சிதம்பரம் கோயிலுக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள், வழக்கு பதிந்த காவல்துறையினர், பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம், பொது தீட்சிதர்கள் குடும்ப சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனையைச் செய்துள்ளனர். இதனை அவர்கள் மருத்துவ அறிக்கையிலேயே தெரிவித்துள்ளனர். சிறுமியின் கன்னித்திரை சேதமடையவில்லை என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இருவிரல் பரிசோதனையை நடத்தியதற்கான ஆதாரமும் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது. முன்னதாக நான் ஆளுநர் குற்றச்சாட்டிற்கு எதிராகக் கருத்துகளைக் கூறியதாகத் தகவல்கள் பரவின. ஆனால், நான் அப்படி எதுவும் கூறவில்லை. ஆளுநர் கூறியது உண்மை தான். சிறுமிகளுக்குத் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தி நடத்தியுள்ளனர். குழந்தைத் திருமணம் நடந்ததாகச் சிறுமி அவர்களின் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை வாங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநர் ரவி தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை. இது தொடர்பான அறிக்கையை ஆணையத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படும்" என ட்விட்டரில் பதிவிட்டார்.

Child marriage video release at Chidambaram Natarajar temple

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி ஆடியோவை வெளியிடாமல் உள்ளோம். சுகாதார அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிகார தொனியில் பேசியுள்ளார். அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

இதற்கிடையில் விசாரணையின் போது காவல்துறை ஏற்கனவே ஆதாரங்களை திரட்டிவிட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதனையடுத்து குழந்தைத் திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் புகைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரை தீட்ஷிதர்கள் தரப்பில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என கூறிவந்தனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியான நிலையில் தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பு அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+