வரி தர மாட்டோம் என்று கூற ஒரு நொடி போதும்: மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
கடலூர்: அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவும், செலவு பண்ணக்கூடியவங்க நீங்க.. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்கிற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக்கொண்டிருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல.. எங்களுக்கு ஒரு நொடி போதும்.. மறந்துடாதீங்க.. ஆனால் கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்.. அதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவும், செலவு பண்ண கூடியவங்க நீங்க.. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்கிற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல.. எங்களுக்கு ஒரு நொடி போதும்.. மறந்துடாதீங்க.. ஆனால் கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்.. அதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதைக்கூட புரிந்து கொள்ளாதவர்கள், ஒன்றியத்தை ஆள்வது தான் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாபக்கேடு..

தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்ப்பதற்காக கொண்டுவரப்படவில்லை.. இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது.. நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்பதால், கல்விக்கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்.. தாய்மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்.. தர்மேந்திர பிரதான் அவர்களே.. தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும்.. இந்தி மொழியால் தாய் மொழியை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள்.. உங்களின் சதித்திட்டத்தின் ஆபத்து புரியும்..
நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று 'தமிழ்' உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை.. ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன்.. தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்.. தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க ஆசைப்படாதீங்க.. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளையும் நான் இருக்கும் வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிற வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது..
நமது திராவிட மாடல் அரசை பொறுத்த வரைக்கும்.. மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம் என்றால், அதற்கான தடைகளை உடைப்பது ஒரு பக்கம் என இரு பாய்ச்சலாக செயல்படுகிறது. இதுபோன்ற தடைகள் வருவது புதிது அல்ல.. ஆனால் இது போன்ற தடைகள் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அதனை உடைப்போம்.. அதனால் வெற்றிப்பாதையை தொடர்கிறோம்.. மக்களாகிய உங்களின் ஆதரவால் வெற்றி என்றென்றும் தொடரும் என்று கூறி விடை பெறுகிறேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கு ரூ.7,585 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அதிரடி! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications