ராத்திரியெல்லாம் அழுத மகேஸ்வரி.. இப்படி பண்ணிட்டியேம்மா.. பதறி கதறிய கணவர்.. அடுத்து நடந்த கொடுமை!

கடலூர் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ராத்திரியெல்லாம் அழுதபடியே மகேஸ்வரி, துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. இதை பார்த்து கதறிய கணவன், சடலத்தை கீழே இறக்கி, மனைவியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவை கழட்டி, அதே துப்பட்டாவில் தானும் தற்தொலை செய்துகொண்டார்.. புது மண தம்பதியின் இந்த தற்கொலைகள் பண்ருட்டியை பதற வைத்துள்ளது!

பண்ருட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்.. 29 வயதாகிறது.. கோவில் கோபுரத்தில் உள்ள பொம்மைகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை பார்த்து வந்தார்.

இவருடன் வேலை பார்த்து வந்தவர் சிவராமன்.. இதனால் அவரது வீட்டிக்கு அடிக்கடி சென்று வரும்போது, சிவராமன் மகள் மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது

கல்யாணம்

கல்யாணம்

மணிகண்டனும் - மகேஸ்வரியும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.. மகேஸ்வரி, பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துள்ளார். இவர்கள் காதல் வீட்டுக்கு தெரியவரவும், அவர்களும் அதற்கு சம்மதம் சொன்னார்கள்... கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு கல்யாணமும் செய்து வைத்தனர். திருவதிகையிலேயே ஒரு வீட்டில் குடித்தனம் ஆரம்பமானது.. மகேஸ்வரி 3 மாத கர்ப்பமானார்.

தகராறு

தகராறு

மணிகண்டனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு அந்த பழக்கம் அதிகமாகிவிட்டது... தினமும் குடிப்பது என்று இருக்கவும், மகேஸ்வரிக்கு இது பிடிக்கவில்லை.. அதனால் தகராறு வெடித்தது.. வழக்கம்போல் சம்பவத்தன்றும் மணிகண்டன் குடித்துவிட்டு வந்தார்.. மகேஸ்வரியிடம் சண்டை போட்டார்.

நடுராத்திரி

நடுராத்திரி

பிறகு போதையில் போய் தூங்கி விட்டார். ஆனால் மகேஸ்வரி, மட்டும் அழுது கொண்டே இருந்தார்.. கடைசியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடுராத்திரி போதை தெளிந்து மணிகண்டன் கண்விழித்தபோது,மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறினார்.. அவரே மகேஸ்வரியை தூக்கில் இருந்து இறக்கினார்... அவரது கழுத்தில் கட்டப்பட்டிருந்த துப்பட்டாவை அவிழ்த்து, அதே அதே துப்பட்டாவால் மணிகண்டனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம்

கடிதம்

விடிந்தும் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் வந்து பார்த்தபோதுதான் தம்பதி 2 பேருமே பிணமாக கிடந்தது தெரியவந்தது.. உடனடியாக பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் சோதனை, விசாரணை என இறங்கினர்.. அப்போதுதான் மணிகண்டன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தற்கொலை

தற்கொலை

அதில், "என் குடிபழக்கத்தால் மனைவியையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் பறிகொடுத்து விட்டேன்... அவள் இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ இஷ்டம் இல்லை.. மகேஸ்வரி சென்ற இடத்துக்கே நானும் போகிறேன்... அம்மா, என்னை மன்னிச்சிடு... மாமா, என் அம்மாவை பார்த்துக்குங்க" என்று எழுதியிருந்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.. கல்யாணம் ஆன 8 மாசத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பண்ருட்டி பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+