Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் 40 வயசில் தமிழரசி விபச்சாரம்.. திட்டக்குடியில் போட்ட ஆட்டம்.. நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 2014ல் நடந்த குற்ற சம்பவத்தில் தம்பதி இருவரும் ஈடுபட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் போலீசில் சிக்கினார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான பெண் உட்பட 3 பேருக்கும் நீதிமன்றம் தண்டனையை வழங்கி உள்ளது..!

கடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இது. திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் 2 பேரும் திடீர்னு ஒருநாள் காணாமல் போய்விட்டனர்.

Cuddalore Prostitution thamizharasi

எனவே, மாயமான மாணவிகளின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் தந்தனர்.. இதையடுத்து, திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 1 வாரம் கழித்து, 2 மாணவிகளும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.. ஆனால், 2 மாணவிகளுமே உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், என்ன நடந்தது என்று தங்கள் மகள்களிடம் விசாரித்தனர்.

40 வயது தமிழரசி

அப்போதுதான் சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி (39) தம்பதியினர் பற்றிய விவரம் தெரியவந்தது. அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தமிழரசி.. இவர்கள் 2 பேரும்தான் மாணவிகளை கடத்திச்சென்று, பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார்களாம்.

திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் போன்ற பகுதிகளிலுள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் மாணவிகளை மிரட்டி ஈடுபடுத்தி சித்ரவதை செய்தார்களாம். இதையெல்லாம் 2 மாணவிகளும் அழுது கொண்டே பெற்றோரிடம் முறையிட்டனர், இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழரசி ஜோடி எங்கே

இந்த வழக்கானது, கடந்த 2016ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. பிறகு சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே மாயமாகி விட்டனர்.. இதன்காரணமாக, தலைமறைவான ஜோடியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்குநடுவில், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட ஜோடி, தலைமறைவாக இருந்தபோதிலும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.

தலைமறைவான தம்பதி

ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால், தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.. இதில் 2014ம் ஆண்டு ஜெபினா (40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்... ஜெபினா மீதான விசாரணை கடலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து முடிந்த நிலையில், ஜெபினாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு தரப்பட்து..

ஆனால் சதீஷ்குமார், தமிழரசி ஜோடி மட்டும் கிடைக்கவில்லை.. அதேசமயம், 7 வருடங்களாக அந்த ஜோடியை தேடும் பணியிலிருந்தும் போலீசார் சோர்ந்து போகவில்லை..

வீட்டு வேலை செய்த தமிழரசி

இந்த சூழலில்தான் சதீஷ்குமார் கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து, சதீஷ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர. அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் தமிழரசி வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதன்பேரில் தமிழரசியையும் போலீசார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்..

சதீஷ்குமார், தமிழரசி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.. இந்த ஜோடிதான் முக்கிய குற்றவாளிகள் என்பதால், இவர்களுக்கான தண்டனை எப்படி இருக்க போகிறது? என்ற ஆர்வம் பொதுமக்களிடம் நிலவி வந்தது..

Cuddalore Prostitution thamizharasi

10 வருடம் ஜெயில் தண்டனை

இந்நிலையில் மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடிக்கும் தண்டனை கிடைத்துள்ளது...

13, 14 வயது சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய ஒவ்வொருவரும் கைதாகி வருவதும், அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து வருவதும் கடலூர் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது... அத்துடன் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அணைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+