கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக இடைவெளி என்னாச்சு?.. வட்டத்தில் நிற்க சொன்னால் வட்டமாக நின்று போராடிய கடலூர் அதிமுகவினர்!

Google Oneindia Tamil News

கடலூர்: சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக வட்டத்தில் நின்று போராட சொன்னால் வட்டமாக நின்று போராடியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்தது.

அனைவரும் சகோதரர்கள்தான்... சமூக நீதி கிடைக்க ஓயாமல் பாடுபடுவோம் - டாக்டர் ராமதாஸ் அனைவரும் சகோதரர்கள்தான்... சமூக நீதி கிடைக்க ஓயாமல் பாடுபடுவோம் - டாக்டர் ராமதாஸ்

திமுக அரசு

திமுக அரசு

இந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என அதிமுக விமர்சனம் செய்தது.

திமுக வாக்குறுதிகள்

திமுக வாக்குறுதிகள்

திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நேற்று அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கொரோனா கால கட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து 1500 -க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூகஇடைவெளி

சமூகஇடைவெளி

பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடலூரில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னர் அந்த களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வட்டங்கள் போடப்பட்டன.

அதிமுக

அதிமுக

இதில் நின்று போராட்டம் நடத்த ஏதுவாக போடப்பட்ட நிலையில் அதிமுகவினரோ வட்டமாக நின்று கொண்டு போராட்டம் நடத்திய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வட்டத்தில் நிற்கச் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு இப்படி வட்டமாக நிற்கிறார்களே என்றும் சமூகஇடைவெளியை காற்றில் விடுகிறார்களே என்றும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
Cuddalore AIADMK not follow Corona preventive measure while they were protesting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X