கடலூர் கல்லூரி மாணவி தர்ஷினி..காதலனுடன் வீடியோ காலில் பேசிய போது.. யோசிக்கவே முடியாத சம்பவம்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த தர்ஷினி என்ற மாணவி, செல்போன் விற்பனை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த தர்ஷினி, காதலன் கண் முன்னே செய்யக்கூடாத தவறை செய்திருக்கிறார். அதனை பார்த்து காதலன் ஆடிப்போனார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய 2கே கிட்ஸ் இளைஞர்கள், இளம் பெண்கள் காதலிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக 10ம் வகுப்பில் தொடரும் காதல், அதாவது பருவ வயதில் தொடரும் காதல், கல்லூரி முடிந்து வாழ்க்கை ஆரம்பிக்கும் வரை நீள்கிறது. அதன்பிறகே திருமணம் செய்வதா அல்லது விட்டு செல்வதா என்பதை முடிவு செய்கிறார்கள். சிலர் கல்லூரி படிப்பை தொடரும் முன்பே திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள். ஒருவரை பற்றி சரியான புரிதல் இல்லாமல், இனக்கவர்ச்சியை காதல் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை தொலைப்பது அதிகரிக்கிறது.

பெற்றோரை விட காதலன் முக்கியம்
எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய வயதில், காதலில் விழுந்து விடுவதால், கண்மூடித்தனமாக காதலி அல்லது காதலன் தான் உலகம் என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களை மறந்து விடுகிறார்கள். பெற்றோரை விட காதலன் அல்லது காதலி தான் பெரியது என்று நினைத்து ஓடிப்போகவும் தயங்குவது இல்லை.. ஒரு காலக்கட்டத்தில் உணரும் போது, குழந்தை வந்துவிடும், சரியான வேலை இருக்காது, முடிவுகள் எடுத்தது தவறு என்று உணரும் போது, வாழ்க்கையே வீணாகியிருக்கும். இதுதான் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது.
கடலூர் தர்ஷினி
அதேபோல் காதலன் அல்லது காதலி இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை கையாளத்தெரியாமல் தவறான முடிவெடுப்பதும் நடக்கிறது. கடந்த சில வருடங்களாகவே காதலி அல்லது காதலன், வாழ்க்கை குறித்து புரிந்து கொள்ளாமல் தவறான முடிவெடுப்பதும் நடக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதாகும், விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். மேலும் அவர், விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் ஊழியராகவும் பணியாற்றி உள்ளார். கல்லூரி மாணவி தர்ஷினி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வீடியோ கால்
இந்த நிலையில் தர்ஷினி நேற்று செல்போன் கடையில் பணியில் இருந்தபோது காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்ற தர்ஷினி, அங்கு உள்ள ஒரு அறையில் தனது துப்பட்டாவால் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவினை யாருமே எடுக்கவேண்டாம்.என்ன நிலையிலும் அப்படி செய்யக்கூடாது.
கன்னியாகுமரி காதலன்
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. காதலியுடன் வீடியோ காலில் பேசிய காதலன் தவறான முடிவெடுத்தார். கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜெய்சங்கரன்(வயது 23) கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேல்படிப்பு படிக்க காத்திருந்தார். இளைஞர் ஜெய்சங்கரனும், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இனம்பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து ஜெய்சங்கரன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வாட்ஸ் அப் கால்
இந்த நிலையில் கடந்த வாரம் ஜெய்சங்கரன் தனது காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் போர்வையால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். எனினும் எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்க்க வேண்டும். உங்களுக்கு தவறான எண்ணங்கள் வந்தால்,அதற்கு உரிய தீர்வுகள் உள்ளது. தயவு செய்து தவறான முடிவெடுக்க வேண்டாம்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications