ஆழ்கடலில் அள்ள அள்ள வந்த அதிசயம்.. ஒரே இடத்தில் மலை போல்.. கடலூர் மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து அண்மையில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல டன் எடையுள்ள மீன்கள் ஒரே நேரத்தில் கிடைத்த 'பெரும்பாறை' எனப்படும் மீன்கள் பல டன் அளவிற்கு கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு ஒரே நாளில் இந்த மீனால் நிறைய பணம் கிடைத்தது.
இந்த பெரும்பாறை மீன் என்பது 'பாறை' மீன் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய வகை கடல் மீன் ஆகும். இது கடலுர் போன்ற கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படுகிறது. இந்த மீன் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த மீனின் எடை 4 கிலோவிலிருந்து 80 கிலோ வரையிலும், அதிகபட்சமாக 170 செ.மீ நீளம் வரையிலும் வளரக்கூடியது ஆகும்.

தமிழ்நாட்டின் கடலூர், தேவனாம்பட்டினம் போன்ற ஆழ்கடல் பகுதிகளில் இவை கிடைப்பது வழக்கமாக உள்ளது. இந்திய-பசிபிக் பெருங்கடலின் வெப்பவலயப் பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாறை மீன் பலருக்கும் பிடித்த மீனாக உள்ளது. இதன் எலும்புகளை எளிதில் அகற்ற முடியும் என்பதால், இது குழம்பு மற்றும் வறுவலுக்கு ஏற்ற மீனாக இருககிறது. மேலும், இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால், இது ஒரு சத்தான மீன் உணவாக இருக்கிறது. இதனால் பெரும்பாறை மீன் கிடைத்தால் போட்டி போட்டு மக்கள் வாங்குவார்கள்.
இந்த சூழலில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் அண்மையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீனவர்கள் கூட்டமாக சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்படி மீன் பிடித்த மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல டன் எடையுள்ள மீன்கள் ஒரே இடத்தில் கிடைத்திருக்கிறது. 'பெரும்பாறை' எனப்படும் இவ்வகை மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மீனும் 4 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தது. வழக்கமாக மீன் பிடிக்கச் செல்லும் போது ஒரு டன் அளவிலான மீன் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு படகிலும் 40 டன்கள் வரை மீன்கள் கிடைத்துள்ளது
ஏறக்குறைய 100 டன்களுக்கு மேல் மீன்கள் கிடைத்துள்ளது. இந்த மீன்கள் வழக்கமாக ஒரு கிலோ ரூ.400 என விற்கப்படும் நிலையில், நேற்று கிலோ ரூ.200-க்கும், ரூ.180-க்கும் விற்கப்படது. ஒரே நேரத்தில் அதிகமான மீன்கள் கிடைத்த காரணத்தால் நேற்று கடலூரில் விலை குறைந்து விற்றது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்து இந்த பெரும்பாறை மீன்களைப் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள்.












Click it and Unblock the Notifications