இப்படியா பண்ணுவாங்க! சிறுமிக்கு சளிக்கு பதில் நாய்க்கடி ஊசி.. செவிலியர் அதிரடி சஸ்பெண்ட்! ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்கு வந்த 12 வயது நிரம்பிய சிறுமியின் மருத்துவ சீட்டை பார்க்காமலே அவருக்கு நாய்க்கடிக்கான ஊசியை செவிலியர் போட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் சிறுமி மயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் செவிலியர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் அருகே கோதண்ட ராமாபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கு 12 வயதில் மகள் இருக்கிறார். இவர் சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கருணாகரன் தனது மகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

 Cuddalore Government Hospital Nurse who injected dog bite injection to a girl came for cold treatment, suspended

அங்கு சிறுமியின் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தந்தையிடம் மாத்திரை, மருந்துக்கான சீட்டு எழுதி கொடுக்கப்பட்டது. அதனை பெற்று கொண்ட அவர் மருத்துவமனையில் மாத்திரை, மருந்து வழங்கும் இடத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு இருந்த செவிலியர், அவர் கொண்டு சென்ற சீட்டை பார்க்கவில்லை. மாறாக நாய்க்கடிக்கான 2 ஊசியை எடுத்து சிறுமிக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கருணாகரன், சீட்டை பார்க்காமலே ஊசி போட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு அவர் நாய்க்கடி குணமாக ஊசி தான் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு சிறுமியும், அவரது தந்தை கருணாகரனும் ஷாக்காகினர். சளி பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு வந்தோம். நாய்க்கடி சிகிச்சைக்கு வரவில்லை என அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவரை சமாதானம் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சிறுமி மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே கருணாகரன் சார்பில் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரில் எனது மகள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். 27 ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பரிசோதித்த டாக்டர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். ஊசி போடவும் சீட்டு கொடுத்தார். பின்னர் அந்த சீட்டை செவிலியரிடம் கொடுத்தேன். இதையடுத்து செவிலியர் 2 ஊசி போட்டார்.

அப்போது ஏன் இரண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு செவிலியர்கள் நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள் என்றார். நான் சளி பிரச்சனையை கூறிய நிலையில் முழுப்பினார். வீட்டில் வைத்து எனது மகள் மயங்கினாள். கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து உள் நோயாளியாகஅதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அலட்சியம் காட்டிய செவிலியர், மருத்துவர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணகி என்ற செவிலியர் பணியில் அலட்சியமாக செயல்பட்டு சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசியை செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து இணை இயக்குனர் சாரா செரின் பால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+