Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் திமுகவையும் வறுத்தெடுத்த பாரிவேந்தர்.. 4 சீட் தர்றேன்.. நேர்ல வாங்க! ஜெயலலிதா அழைத்தும் போகல

Subscribe to Oneindia Tamil

கடலுார்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசாரில் இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) 4-வது மாநில மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.. இந்த விமர்சனங்கள் அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசாரில், ஐ.ஜே.கே., 4வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.. இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது:

Cuddalore Parivendhar IJK DMK Tamil Nadu Politics Jayalalithaa

கடலூர் பாரிவேந்தர்

அடிப்படையில் நான் கல்வியாளர். கல்விக்காக நிறைய தொண்டுகள் செய்துவருகிறோம். மக்கள் நலன் கருதியே இந்திய ஜனநாயகக் கட்சியை தொடங்கினோம். இதுவரை 4 சட்டப்பேரவை மற்றும் 3 மக்களவைத் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக பாடுபட்டு கட்சியை வளர்த்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அத்தொகுதியில் வெற்றிபெற்று என்னவெல்லாம் செய்தேன் என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள். 1500 மாணவர்களை இலவசமாக படிக்க வைத்தோம்.

ஐஜேகே மாநாடு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 3வது மாநாடு, விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடாக நடந்தது. மாநாடு சிறப்பாக அமைந்துள்ளதாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், அக்கட்சி எம்.பி., இளவரசன் கூறினார். "பாரிவேந்தரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வர வேண்டும், அவரை விட்டு விடாதீர்கள்., 4 அல்லது 5 சீட் தரத் தயாராக இருக்கிறேன்" என்று ஜெயலலிதா சொன்னதாக இளவரசன் கூறினார்.

அவர் என்னை வலியுறுத்தி அழைத்த போதும் ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டேன். எங்கள் கட்சியின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, கல்விக்கு உதவி செய்வது என்ற நோக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது,

மாநாடு நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. அது, எந்தளவுக்கு அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியிலான மாநாடு என்பது தோழமை கட்சிகளுக்கு பலத்தை நிரூபிக்க நடத்தப்படுவதாகும்.

திமுக ஆட்சி

கடந்த முறை பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மக்களவைக்கு சென்றபோது ஏன் வந்தோம் என்றாகிவிட்டது. திமுக உறுப்பினர்கள் பதவியேற்கும்போது தமிழ்நாடு வாழ்க, அக்கட்சியின் தலைவர் வாழ்க என கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் பதவியேற்றபோது இந்தியா வாழ்க தமிழ்நாடு வாழ்க எனக் கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன்.

ஏன் இங்கே இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் இந்தியா வளர்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும். அந்த மனப்பான்மை எனக்கு. திமுக எம்.பி.க்கள் திட்டமிட்டே ஒருநாளும் மக்களவையை நடத்த விடமாட்டார்கள். வளர்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமின்றி வளர்ச்சியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோடு எப்போதும் எதிர்ப்பு என்ற நிலை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்? இதனால் இழப்பு தமிழ்நாட்டிற்கு தான்.

தமிழகத்தில் ஊழல், கொள்ளை, கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாடு இதே நிலையில் சென்று கொண்டிருந்தால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடுமையானதாகும்.

திராவிட கட்சிகள்

மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை, எவ்வளவு உயர்ந்தாலும் பரவாயில்லை என, மக்கள் நினைக்கின்றனர். அதனாலேயே, இலவச திட்டங்களுக்கு மயங்கி கிடக்கின்றனர். மக்களின் இந்த நிலை மாற வேண்டும்.

திராவிடக் கட்சிகள் வந்த பின்னர் தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மாணவர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உருவாகியிருக்கிறது. மக்கள் இதை கவனிக்க வேண்டும். இப்படியே இது தொடருமானால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+