கடலூர் அருகே கணவனுக்கு மீன் குழம்பு ஊற்றிய விஜயா.. எதிர்வீட்டில் வெயிட்டிங்கில் 57 வயசு கள்ளக்காதலன்
கடலூர்: கடலூரில் கணவன் மனைவிக்கு திருமணமாகி 27 வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை.. இப்படிப்பட்ட சூழலில், இந்த கொடுமை நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து துரிதமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில், நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களாகவே இருந்து வரும்நிலையில், பாலியல் வன்கொடுமைகளாலும் பெண்களே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அதிலும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

இதற்கு நேர்மாறாக ஆண்களின் பாதுகாப்பும் அவசியமாகி கொண்டிருக்கிறது.. குடும்ப வன்முறைகளால் விவாகரத்துகள் அதிகரித்து வந்தாலும், கணவன்களையும், உலகமறிய பச்சிளம் குழந்தைகளையும், பெண்களே கொலை செய்வது உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், கடலூரிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கோவையில் சமையல் வேலை
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன்.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி விஜயாவுக்கு 48 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 27 வருடங்கள் ஆகின்றன. ஆனால், குழந்தை இல்லை..
கோபாலகண்ணன் சமையல் வேலை பார்ப்பவர்.. இதனால், கோயம்புத்தூரில் செயல்படும் ஒரு கல்லுாரியியே தங்கி சமையல் வேலை பார்த்து வருகிறார்.. இதனால், கல்லூரி விடுமுறை என்றால் மட்டுமே இவரும், சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், வீட்டில் இருந்துவந்த விஜயாவிற்கும், எதிர்வீட்டில் வசித்து வந்த தேவநாதன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. தேவநாதனுக்கு 57 வயதாகிறது.. திருமணமாகி 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
எதிர்வீட்டு கள்ளக்காதல்:
இந்த கள்ளக்காதல் விவகாரம், கோபாலகண்ணனின் அப்பா ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்துள்ளது.. எனவே, இதுகுறித்து மகனிடம் கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன கோபாலகண்ணன், மறுபடியும் வேலைக்கு கோவை செல்லவே யோசித்தார்.. எனவே, கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தம்பதிக்கு தகராறு தகராறு ஏற்பட்டது. நேற்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் கோபாலகண்ணன் வீட்டில் விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து, ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர்..
கணவனுக்கு மீன் குழம்பு:
அப்போதுதான், கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்தது அம்பலமானது.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், விஜயா, தேவநாதன் ஆகிய இருவருமே சேர்ந்து திட்டம் தீட்டி, கோபாலகண்ணனை கொல்ல முடிவு செய்துள்ளனர்.. இதற்காக நேற்றுமுன்தினம், விஜயா மீன் குழம்பு வைத்து, அதில், பூச்சி மருந்தையும் கலந்து கோபாலகண்ணனுக்கு பரிமாறியுள்ளார்.. இது தெரியாமல் அந்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டு இறந்திருப்பதாக தெரியவந்தது..
இதையடுத்து போலீசார விஜயா மற்றும் தேவநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்பபடுத்தி சிறையில் அடைத்தனர். அன்றைய தினம் தம்பதிக்குள் தகராறு நடந்தாலும், மனைவி வைத்த மீன்குழம்பை நம்பி சாப்பிட்டு, வாயில் நுரை தள்ளி இறந்திருக்கிறார் கோபாலகண்ணன்.












Click it and Unblock the Notifications