என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி! ராட்சத குழாய்களும் இன்றே பதிப்பு
கடலூர்: என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிக்காக கான்கிரீட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2ஆவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை என்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு, கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை, இந்த நிலையில் அரசியல் கட்சியினர் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சத ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அணை போடும் பணி நடந்தது.
இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு அதில் அணைகள் போடப்பட்டன. இதையடுத்து அங்கு விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டன.
இந்த விவகாரம் அறிந்து பாமகவினர் நேற்று சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இன்றைய தினம் என்எல்சியால் அழிக்கப்பட்ட நிலங்கள் வட்டாட்சியர் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
அதே நேரத்தில் என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய்க்காக கான்கிரீட் அமைப்புகள் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக மேலும் 10 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 40 ஜேசிபி இயந்திரங்களின் துணையுடன் இந்த பணிகள் நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்குகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications