ஆம்னி பஸ்ஸில் அந்த மூட்டையை திறந்து பார்த்தால்.. விழித்த பயணி.. சென்னை டூ கடலூர் ரூட்டில் பரபரப்பு
கடலூர்: சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தமிழகம் காத்து கொண்டிருக்கிறது.. தேர்தல் நெருங்கிவிட்டால், வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகள் தரப்படுவது பெருகிவிடும்.. வருமானவரித் துறையினரும், அமலாக்க துறையினரும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபடுவதும் வழக்கமாகும். தற்போது தேர்தலுக்கு முன்பாகவே கண்காணிப்புகள், சோதனைகள் பெருகி வருகின்றன. என்ன காரணம்?
ஹவாலா பரிவர்த்தனை என்பது கடுமையான சட்டவிரோத செயலாகும்.. எனினும் இதனை முழுமையாக ஒழித்துவிட முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது..

முறையான ஆவணங்கள்
ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் சட்டப்பூர்வமான வங்கிகளை நாட முடியாது என்பதால், அவர்கள் ஹவாலா முறையை நாடுகின்றனர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கவும், போதைப் பொருள் கும்பல் அல்லது தீவிரவாத இயக்கங்கள் நிதி திரட்டவும் ஹவாலா முறை பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவந்ததுமே, இது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது.
அதனால்தான், ஒருவர் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும்போது, அதற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு
தமிழகத்தை பொறுத்தவரை, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதற்கான மும்முரத்தில் அரசியல் ஈடுபட்டு வருகின்றன..
அதேசமயம், பல்வேறு இடங்களில் ஹவாலா பணம் பிடிபட்டு வருகிறது.. அரசியல் கட்சிகள் முன்கூட்டியே பணத்தை வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக பதுக்கி வைக்க எடுத்து செல்லப்படுகிறதா என்ற சந்தேகம், இதன்மூலம் பொது மக்களுக்கு எழுந்து வருகிறது.
வழக்கமாக அனைத்து மாநில எல்லை, மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன சோதனை ஈடுபடுவது வழக்கம்.. அப்படி ஈடுபடும்போது, பெரும்பாலும் மதுபாட்டில்கள் அல்லது ரேஷன் அரிசி போன்றவை பிடிபடுவது வழக்கம்... தேர்தல் சமயங்களில்தான், கார், ஆம்னி பஸ் போன்றவற்றை சோதனையிடும்போது ஹவாலா பணமும் சிக்குவதுண்டு.
ஆம்னி பஸ்
அந்தவகையில், கடந்த சில மாதங்களாக ஹவாலா பணம் பிடிபடுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 23ம் தேதி சென்னை டூ மன்னார்குடி ஆம்னி பஸ்சில் 40 லட்சம் ரூபாய் தொகை பிடிபட்டது. கடந்த மே 31ம் தேதி சென்னை டூ நாகை சென்ற காரில் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 3 மாதத்தில் மட்டும் , இந்த அளவுக்கு ஹவாலா பணம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன..
இப்போது கடலூரில் ஹவாலா பணம் சிக்கியிருக்கிறது.. கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் சென்றது..
ஆவணங்கள் எங்கே
அந்த பஸ்ஸில் பயணித்த ஒரு இளைஞரிடம் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. பணம் பிடிபட்டதுமே, சென்னைக்கு சென்று பணத்துக்கான ஆவணங்களை எடுத்து வருவதாக இளைஞர் சொன்னார்.. எனவே போலீசார் அந்த ரூ.35 லட்சத்தை கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துவிட்டு, அந்த இளைஞரை ஆவணங்கள் கொண்டுவரும்படி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த இளைஞர் பணத்துக்குரிய ஆவணங்களை கொண்டு வந்தால் பணம் அவரிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் கூறுகிறார்கள்.. இன்னும் அந்த இளைஞர் ஆவணங்களுடன் வரவில்லை.
பெருத்த சந்தேகம்
போலீசார் கைப்பற்றியிருக்கும் அனைத்து ஹவாலா பணமும், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..
விசாரணையின் முடிவில்தான் பணம் யாருடையது? என்பது தெரியவரும். எனினும் சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஹவாலா பணம் நடமாட்டம் பெருகிவருவது, பொதுமக்களுக்கு சந்தேகத்தை தந்து கொண்டிருக்கிறது.
பிடிபட்ட தொகையே இவ்வளவு என்றால், இன்னும் போலீசாரிடம் பிடிபடாமல் செல்லும் பணம் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை.. அதேசமயம், சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.. இப்போது சென்னையில் ஹவாலா பணம் சிக்கியிருக்கிறது..
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications