எனக்குன்னே வருவீங்களா.. 'ஊதுப்பா ஊதுப்பா'.. பாடாய் படுத்திய ஆட்டோ ஓட்டுநர்.. கடலூர் போலீசார் கெஞ்சல்
கடலூர்: கடலூரில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை மது அருந்தும் கருவியில் ஊதச் சொல்லி 10 நிமிடத்திற்கு மேலாக மல்லுக்கட்டினர்.
வார இறுதி நாளானதால் பலர் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது வார இறுதிகளில் அதிகமாக உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் மது போதையில் விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிர சோதனை நடத்துகிறார்கள்.

அப்படித்தான் கடலூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கடலூர் நகரப்பகுதியில் தாறுமாறாக ஓடிய ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் நிறுத்தாமல் அவர் சென்றுள்ளார். உடனே அவரை போக்குவரத்து போலீசார் துரத்தி சென்றனர்.
அந்த ஆட்டோவை கடலூர் பாரதி சாலை பெட்ரோல் பங்கில் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த ஓட்டுநர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை உறுதி செய்யும் கருவியில் அவரை போலீசார் ஊதச் சொன்னார்கள்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கருவியில் ஊதாமல் தொடர்ந்து அடம் பிடித்தார். ஊது தம்பி என கெஞ்சி போலீசார், சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு மல்லுக்கட்டினர். ஊது, ஊது, ஊதுய்யா, ஒழுங்கா ஊதுய்யா என்று தொடர்ந்து கெஞ்சிய நிலையில் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகே ஆட்டோ ஓட்டுநர் ஊதினார். அந்த சோதனையில் அவர் மது அருந்தி இருந்தது உறுதியானது.
இதையடுத்த ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் விதிக்கப்படுகிறது. மது அருந்தியவர்களிடம் வாகனத்தை பொதுவாக பறிமுதல் செய்யும் போலீசார் அபராதம் கட்டிய உடன் விடுவித்துவிடுவார்கள்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றால், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.
சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபாதம் விதிக்கப்படும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிக்னலை முதல் முறை மீறி சென்றால் 500 ரூபாயும், அடுத்த முறை அல்லது அதற்கு மேல் என்றால் 1500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. கண்ட இடத்தில் பார்க்கிங் செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications